goldrate01

சென்னையில் ஆபரணத்தின் தங்கத்தின் விலை இன்று(செப். 23) அதிரடியாக சவரனுக்கு ரூ. 560 உயர்ந்துள்ளது.

நிகழாண்டு தொடக்கம் முதலே சா்வதேச போர் பதற்றம், உலக நாடுகளின் மீதான அமெரிக்க அரசின் பரஸ்பர வரி விதிப்பு, அமெரிக்க ஃபெடரல் ரிசா்வ் வங்கியின் வட்டி விகிதம் குறைப்பு அறிவிப்பு உள்ளிட்ட பல்வேறு சா்வதேச காரணங்களால், தங்கத்தின் விலை உயர்வைக் கண்டு வருகிறது.

தங்கத்தின் மீதான முதலீடும் அதிகரித்து வருகிறது. இதனால், தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. கடந்த செப்.16-ஆம் தேதி சவரன் ரூ.82 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை தொட்டது. அதைத்தொடர்ந்து சற்று ஏற்ற, இறக்கமாக இருந்து வந்தது.

கடந்த செப்.18-இல் சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.81,760-க்கும், செப்.19-இல் சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.81,840-க்கும் விற்பனையானது. தொடர்ந்து, சனிக்கிழமை கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ரூ.10,290-க்கும், சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.82,320-க்கும் விற்பனையாகி புதிய உச்சத்தை தொட்டது.

வாரத்தின் முதல் நாளான நேற்று(செப். 22) காலை தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.10,360-க்கும், சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.82,880-க்கும் விற்பனையாது.

தொடர்ந்து மாலை வர்த்தகம் நிறைவடையும் தருவாயில் தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது. அதன்படி, கிராமுக்கு மேலும் ரூ.70 உயர்ந்து ரூ.10,430-க்கும், சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.83,440-க்கும் விற்பனையானது. இதன்மூலம் ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்தது.

இந்த நிலையில், சென்னையில் ஆபரணத்தின் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ. 70 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ. 10,500-க்கும் சவரனுக்கு ரூ. 560 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ. 84,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் உயர்வு: வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.149-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.1,000 உயர்ந்து ரூ.1.49 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிக்க: ஹெச்-1பி விசா கட்டண உயர்வு நடைமுறையில் மருத்துவர்களுக்கு விலக்கு?!

The price of gold jewellery in Chennai has risen sharply today (Sept. 23) by Rs. 560 per sovereign.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest