hero-imag-2025-08-10T121408.589

சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல் இன்று சென்னையில் நடைபெறுகிறது. பல சின்னத்திரை நடிகர்கள் நடிகைகள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். இந்த நிலையில், சின்னத்திரை நடிகையான ரவீனா தன்னை ஓட்டு போட அனுமதிக்கவில்லை என்று செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து ரவீனா கூறுகையில்” எனக்கு ஒரு வருடத்திற்கு எந்த சீரியலிலும் நடிக்கக் கூடாது என்று ரெட் கார்டு கொடுத்துள்ளனர். எதற்காக எனக்கு ரெட் கார்டு கொடுத்தார்கள் என்று சரியான காரணம் தெரியவில்லை. எனக்கு ரெட் கார்ட் கொடுத்தது நியாயமாகப்படவில்லை. அந்த விவகாரம் பற்றி இப்போது பேச வேண்டாம்.

நான் சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தலில் வாக்களிக்க வந்தபோது என்னை ஓட்டு போடக்கூடாது என்றும் சொல்லிவிட்டார்கள்.

சீரியலில் தான் நடிக்கக்கூடாது என்று கூறிவிட்டார்கள், சங்கத்தில் வந்து நிற்கலாம் இதுபோன்ற யாருக்காவது ரெட் கார்ட் குறித்த பிரச்சனைகள் வந்தால் அதற்காக துணை நிற்கலாம் என்று ஒரு உறுப்பினராக இங்கு வந்தேன். ரெட் கார்ட் கொடுத்ததால் உறுப்பினராகக் கூட வாக்களிக்க முடியாது என்று கூறிவிட்டார்கள்.

தயாரிப்பாளர்களுக்கு என்னால் இழப்பீடு ஏற்பட்டதால் ரெட் கார்ட் கொடுக்கப்பட்டுள்ளதாகக் கூறினர். தேர்தலில் நிற்காதவர்கள் ஓட்டு போடக்கூடாதா? அந்த உரிமை கூட எனக்கு இல்லையா? என்று தான் நான் கேட்கிறேன்.

தொழில் ரீதியாக தான் என்னை தடை செய்தார்கள். ஆனால் ஓர் உறுப்பினராக ஏன் என்னை ஓட்டு போட அனுமதிக்கவில்லை. ஓட்டுரிமையை ஏன் எடுத்துக் கொள்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.

இதுபோன்று தடை விதித்தது பரத் மற்றும் அவர்களின் குழுவினர்கள் என்று கூறுகின்றார்கள். ஆனால் நான் இங்கு வரும்போது என்னை கட்டி அணைத்து கண்டிப்பாக ஓட்டு போட்டு விடு என்று கூறுகிறார்கள். தடை விதிப்பதற்கு காரணமாகவும் இருக்கிறார்கள் ஓட்டும் போடவும் சொல்கிறார்கள்.

ஒரு பெண் தைரியமாக ஏதாவது ஒரு விஷயத்தை குறிப்பிட்டார் என்றால் உடனே அவர்களுக்கு ரெட் கார்டு கொடுத்து அவர்களை சில வருடங்களுக்கு தடை செய்து வைத்துவிடுகிறார்கள்.

என்னை தடை செய்து நான் சம்பாதிக்காமல் இருப்பது உங்களுக்கு சந்தோஷமாக இருக்கிறது என்றால் இருந்து கொள்ளுங்கள் என்று கண்ணீர் மல்க பேட்டி அளித்திருக்கிறார் சின்னத்திரை நடிகை ரவீனா.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest