rites

மத்திய பொதுத்துறை நிறுவனமான ரைட்ஸ் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள உதவி மேலாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்த விவரங்களை பார்ப்போம்…

பதவி: DGM (Civil-BLT Expert) – 1

தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் 11 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பதவி: DGM (Transport Economist) – 1

தகுதி: பொறியியல் துறையில் சிவில், 5 ஆண்டுகள் கட்டிடக்கலை(பி.ஆர்க்), திட்டமிடல் ஆகிய பிரிவில் இளநிலைப் பட்டம் அல்லது பொருளாதாரம், புள்ளியியல், மேலாண்மை (நிதி), போக்குவரத்து பொறியியல், போக்குவரத்து திட்டமிடல், போக்குவரத்து பொருளாதாரம், போக்குவரத்து பொறியியல் அல்லது அதற்கு இணையான பாடங்களில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பதவி: DGM (Civil-Marine Structural Expert) – 2

தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் இளங்கலை மற்றும் கடல் கட்டமைப்புகள் அல்லது கடலோரப் பொறியியல் அல்லது கடல் பொறியியல் அல்லது சமமான பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.70,000 – 2,00,000

வயதுவரம்பு: 41-க்குள் இருக்க வேண்டும்.

பதவி: Assistant Manager

1. Civil – Planning – 2

தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

2. SHE Expert – 4

தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் Industrial Safety, Environmental Engineering-இல் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

3. Civil-Hydrographic Surveyor – 1

தகுதி: பொறியியல் துறையில் சிவில், மரைன் பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

4. Civil-Rail Alignment Design – 2

தகுதி : பொறியியல் துறையில் சிவில் பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் Geotechnical Engineering, Civil Structural Engineering பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

5. Civil-GIS Specialist – 1

தகுதி : பொறியியல் துறையில் சிவில் பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் Remote Sensing, Geoinformatics பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

இந்தியன் ரயில்வேயில் 6,235 டெக்னீசியன் பணியிடங்கள்: ஆர்ஆர்பி அறிவிப்பு

6. Civil- BIM Modeller – 4

தகுதி : பொறியியல் துறையில் சிவில் பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மேற்கண்ட பணிகளுக்கு மாதம் ரூ. 40,000 – 1,40,000

வயதுவரம்பு: 32-க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வு மையம்: தில்லி,குர்கான், கொல்கத்தா, பெங்களூரு, மும்பை, ஹைதராபாத், கௌகாத்தி

விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி பிரிவினர் ரூ. 600. இடபுள்யுஎஸ், எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர் ரூ. 300. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.rites.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 27.7.2025

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

ரிசர்வ் வங்கியில் வேலை வேண்டுமா?: உடனே விண்ணப்பிக்கவும்!

RITES Ltd., a NavRatna Central Public Sector Enterprise under the Ministry of Railways, Govt. of India is a premier multi-disciplinary consultancy organization in the fields of transport, infrastructure and related technologies.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest