robo-shankar

நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக் குறைவால் நேற்று இரவு காலமானார். அரசியல் பிரமுகர்கள், திரைப்படப் பிரபலங்கள் உட்பட பலர் அவருக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

எல்லாரும் தங்களது ஆழ்ந்த அனுதாபங்களை அவரது குடும்பத்தாருக்குத் தெரிவித்து வருகின்றனர்.

ரோபோ சங்கர் மறைவு: ‘இளம் வயதிலேயே அவரது உடல் பாதிப்பதற்கு இதுதான் காரணம்’- நடிகர் இளவரசு
நடிகர் இளவரசு

இந்த நிலையில், ரோபோ சங்கருக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தி விட்டு செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய நடிகர் இளவரசு ரோபோ சங்கரின் மரணத்திற்கு இதுதான் காரணம் என்று பேசியிருக்கிறார்.

இளவரசு பேசியதாவது, “என்னுடைய நெருங்கிய நண்பர் ரோபோ சங்கர். பொதுவாக சினிமா பிரபலங்கள் யாராவது உயிரிழந்தால் அதற்கு மது தான் காரணம் என்று நினைப்பார்கள்.

ஆனால் இவர் சினிமா வருவதற்கு முன்பு ரோபோவாக நடித்தபோது அவரின் உடல் முழுவதும் சில்வர் பெயிண்ட் பூசிக் கொள்வார்.

மேடையில் பெர்ஃபார்ம் செய்வதற்காக உடல் முழுவதும் சில்வர் பெயிண்டை பூசிக் கொண்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதன் பின்னர் உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி அதனை நீக்குவார்.

ரோபோ சங்கர்
ரோபோ சங்கர்

தொடர்ச்சியாக பெயிண்ட் மற்றும் மண்ணெண்ணெய் பட்டதன் காரணமாக அவரது தோல் வலுவிழந்துள்ளது. இதில் ஏற்பட்ட குறைபாடுகளால்தான் அவருக்கு மஞ்சள் காமாலை ஏற்பட்டிருக்கிறது.

இளம் வயதிலேயே இந்த பாதிப்பு அவருக்கு ஏற்பட்டுவிட்டது. வயது அதிகரிக்க அதிகரிக்க அதற்கு ஏற்றாற்போல் உடலைப் பாதுகாத்திருக்க வேண்டும். ஆனால் உடலைப் பற்றி கவலைப்படாததால் இவ்வாறு நடந்துவிட்டது.

இதுபோன்ற கெமிக்கல்களைப் பயன்படுத்தும் போது கவனமாக இருங்கள். 46 வயது என்பது மரணத்திற்கான வயதில்லை” என்று கவலையுடன் தெரிவித்தார்.

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே…!

Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest