
நடிகர் ரோபோ சங்கர் (46) உடல்நலக் குறைவால் காலமானார். இவரின் மறைவு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2023-ம் ஆண்டு, இவருக்கு மஞ்சள் காமாலை (Jaundice) நோய் ஏற்பட்டது. தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வந்த இவர் உடல்நலக் குறைவால், நேற்று முன்தினம் காலை சென்னையில் உள்ள பெருங்குடி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி, நேற்று (செப். 18) உயிரிழந்தார்.

கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் நடிகர் ரோபோ ஷங்கர்.
இந்த நிகழ்ச்சியில் இவருக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக பிரபலமடைந்தார்.
தனுஷின் ‘மாரி’, விஜய்யின் ‘புலி’, சிவகார்த்திகேயனின் ‘வேலைக்காரன்’ உள்ளிட்ட படங்களில் நடித்து மக்களின் மனதை ஈர்த்திருந்தார்.
தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் ஆண்டனி ஆகியோர் நேரில் சென்று ரோபோ சங்கரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி இருக்கின்றனர். சிவகார்த்திகேயன் கண்கலங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி இருக்கிறது.
தவிர திரைப்பிரபலங்கள் பலரும் ரோபோ சங்கரின் உடலுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் நடிகை வரலட்சுமி வெளியிட்டிருக்கும் பதிவில், “நான் ஞாயிற்றுக்கிழமை தான் அவருடன் பேசினேன். ஆனால் இப்போது அவர் இல்லை. என்னால் இதனை நம்ப முடியவில்லை. அவரது குடும்பத்தினருக்காக நான் வேண்டிக்கொள்கிறேன். அவர் பலருக்கும் சிரிப்பை தந்தவர். இறைவன் அவருக்கு சாந்தியை அருளட்டும்” என்று பதிவிட்டிருக்கிறார்.
I spoke to him on Sunday and now he’s now more.. just too sudden .. I just can’t believe it.. prayers to the family.. he made so many people laugh..may he rest in peace.. pic.twitter.com/G7jmqtzMBh
— (@varusarath5) September 18, 2025

நடிகர் சிம்பு வெளியிட்டிருக்கும் பதிவில், ” நடிகர் ரோபோ சங்கர் அவர்கள் மறைந்த செய்தி கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன். எப்போதும் சிரிப்பை பரிமாறிய ஒரு மனிதரை இப்படி இழந்துவிடுவது மிகுந்த வேதனை. அவர் மறைவு திரையுலகத்திற்கும், ரசிகர்களின் இதயங்களுக்கும் பெரும் இழப்பு.
என்றும் நம்முள் வாழும் அவரின் சிரிப்புகள் நினைவாகவே இருக்கும். அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கல் அனுதாபங்கள்” என்று தனது இரங்கலைத் தெரிவித்திருக்கிறார்.
நடிகர் ரோபோ சங்கர் அவர்கள் மறைந்த செய்தி கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன். எப்போதும் சிரிப்பை பரிமாறிய ஒரு மனிதரை இப்படி இழந்துவிடுவது மிகுந்த வேதனை. அவர் மறைவு திரையுலகத்திற்கும், ரசிகர்களின் இதயங்களுக்கும் பெரும் இழப்பு. என்றும் நம்முள் வாழும் அவரின் சிரிப்புகள் நினைவாகவே… pic.twitter.com/TSL7bKlaZF
— Silambarasan TR (@SilambarasanTR_) September 18, 2025
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…