AP25260027535997

இன்டர் மியாமி அணி சியாட்டல் சௌண்டர்ஸ் அணியை 3-1 என வீழ்த்தியது.

லீக்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் இந்த அணியிடம்தான் இன்டர் மியாமி 0-3 என தோற்றது குறிப்பிடத்தக்கது.

லீக்ஸ் கோப்பை தோல்விக்குப் பழிதீர்த்த இன்டர் மியாமி

எம்எல்எஸ் தொடர்ல் இன்டர் மியாமி அணி சியாட்டல் சௌண்டர்ஸ் அணியுடன் இன்று அதிகாலை மோதின.

இந்தப் போட்டியில் 12-ஆவது நிமிஷத்தில் மெஸ்ஸி உதவியால் ஜோர்டி ஆல்பா கோல் அடித்தார். அடுத்து 41-ஆவது நிமிஷத்தில் ஆல்பா உதவியால் மெஸ்ஸி கோல் அடித்தார்.

52-ஆவது நிமிஷத்தில் டீ பால் உதவியால் ஐயான் ப்ரை கோல் அடிக்க, இண்டர் மியாமி 3-0 என முன்னிலை பெற்றது.

கடைசி வரை போராடிய சியாட்டல் அணி 69-ஆவது நிமிஷத்தில் ஒரு கோல் மட்டுமே அடித்தது

மெஸ்ஸி ஆட்ட நாயகன்

சிறப்பாக விளையாடிய மெஸிக்கு ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டது.

இந்த சீசனில் மெஸ்ஸி 20 போட்டிகளில் 21 கோல்கள் அடித்து அசத்தியுள்ளதும் கவனிக்கத்தக்கது.

சியாட்டல் அணியுடன் லீக்ஸ் கோப்பையில் ஏற்பட்ட மோதலால் லூயிஸ் சௌரஸ் 3 எம்எல்எஸ் போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்பட்டது.

இந்த வெற்றியின் மூலம், 27 போட்டிகளில் 49 புள்ளிகளுடன் இன்டர் மியாமி ஐந்தாவது இடத்தில் இருக்கிறது.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest