
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் குழந்தைகள் அதிக நேரம் செல்போன், கணினி போன்ற மின்னணு திரைகளைப் பார்ப்பதால், அவர்களின் கண் பார்வை கடுமையாக பாதிக்கப்படுகிறது.
குறிப்பாக, கிட்டப்பார்வை குறைபாடு உலகளவில் குழந்தைகள் மத்தியில் அதிகரித்து வரும் நிலையில் சீனாவில் இதற்காக ஒரு முயற்சியை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சீனாவில் உள்ள வுஹான் நகரப் பள்ளிகளில் மாணவர்களின் மேசைகளில் ‘ரோலர் கோஸ்டர்’ போன்ற தோற்றமளிக்கும் உலோகக் கம்பிகள் பொருத்தப்பட்டுள்ளன.
squint-free என அழைக்கப்படும் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம், குழந்தைகளின் அமரும் தோரணையை சரிசெய்வதும், ஆரோக்கியமான வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பதுமாகும்.

இந்தக் கம்பிகள், மாணவர்கள் புத்தகங்களை சரியான தூரத்தில் வைத்துப் படிக்க உதவுகின்றன. மேலும், படிக்கும்போது மாணவர்கள் தங்கள் முகவாயை இந்தக் கம்பியில் வைத்துக் கொள்ளவோ அல்லது புத்தகங்களை இதன் மீது வைத்துப் படிக்கவோ முடியும். இது அவர்களின் கண் மற்றும் முதுகெலும்புக்கு ஏற்படும் அழுத்தத்தைக் குறைக்கிறது.
வுஹானில் உள்ள 19 தொடக்கப் பள்ளிகளில் இந்தத் திட்டம் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளது.
“இந்தக் கம்பிகள், பிற்காலத்தில் குழந்தைகள் நல்ல வாசிப்புப் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள உதவும்” என பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பார்ப்பதற்கு வித்தியாசமாக இருந்தாலும், குழந்தைகளின் கண் ஆரோக்கியத்திற்கு நீண்டகால நன்மைகளைத் தரும் ஒரு எளிய மற்றும் புத்திசாலித்தனமான யோசனையாக இது கருதப்படுகிறது.
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே…!