
நடிகர் வசந்த் ரவி நடித்த இந்திரா படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
தரமணி, ராக்கி படங்களின் மூலம் கவனம் பெற்ற நடிகரான வசந்த் ரவி தற்போது இந்திரா என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இயக்குநர் சபரிஸ் நந்தா இயக்கத்தில் கிரைம் திரில்லர் கதையாக உருவான இப்படத்தில் நடிகர்கள் கல்யாண், சுனில், மெஹ்ரின் பிர்சாதா, அனிகா சுரேந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த நிலையில், இந்திரா திரைப்படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளனர். பெண்கள் கொலையும் அதைச் செய்தது யார் என்கிற கோணத்திலான காட்சிகளும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.