
நடிகை ரித்விகா தனது வருங்கால கணவர் யார் என்பது குறித்து அறிவித்துள்ளார். அவருடன் திருமணம் நிச்சயமான புகைப்படங்களையும் ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். அவருக்கு ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இயக்குநர் பாலா இயக்கிய பரதேசி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ரித்விகா, தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் புகழ் பெற்றார்.
மெட்ராஸ் படத்தில் நடித்ததற்காக பிலிம்ஃபேர் விருது வென்ற இவர், 2016ஆம் ஆண்டு மட்டும் 6 படங்களில் நடித்திருந்தார். அதில், ஒரு நாள் கூத்து, கபாலி போன்றவை கவனம் பெற்றவை.
நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பாத்திரங்களைத் தேர்வு செய்து நடிப்பதில் திறமை வாய்ந்த ரித்விகா, தற்போது திருமண வாழ்க்கையில் இணைய முடிவு செய்துள்ளார்.

திருமண வாழ்வில் யாரை அவர் துணையாகத் தேர்வு செய்துள்ளார் என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், தனது வருங்கால கணவர் பெயரை வினோத் லட்சுமணன் என இன்ஸ்டாகிராமில் குறிப்பிட்டுள்ளார்.
முகத்தை காட்டாதபடி, நிச்சயதார்த்தத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ரசிகர்களுடன் ரித்விகா பகிர்ந்துள்ளார். அதில் தங்கள் முதல் எழுத்து பதித்த மோதிரங்களை இருவரும் அணிந்துள்ளனர்.
திருமண வாழ்வில் இணையவுள்ள ரித்விகாவுக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிக்க | வெற்றி மாறன் படத்திற்காக உடல் எடையைக் குறைத்த சிம்பு!