income_tax1

கடந்த 11 ஆண்டுகளில் திருப்பியளிக்கப்பட்ட வருமான வரி ரீஃபண்ட் தொகை 474 சதவீதம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், ‘கடந்த 2013-14-ஆம் ஆண்டில் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. அப்போது வருமான வரி ரீஃபண்டாக ரூ.83,008 கோடியை வருமான வரித் துறை திருப்பியளித்தது.

இது தற்போதைய மத்திய பாஜக ஆட்சியில் 2024-25-ஆம் ஆண்டின்போது, திருப்பியளிப்புத் தொகை ரூ.4.77 லட்சம் கோடியாக 474 சதவீதம் அதிகரித்தது.

கடந்த 2013-14-ஆம் ஆண்டு ரூ.7.22 லட்சம் கோடியாக இருந்த மொத்த நேரடி வரி வசூல், 2024-25-இல் ரூ.27.03 லட்சம் கோடியாக 274 சதவீதம் அதிகரித்தது. மொத்த நேரடி வரி வசூல் அதிகரித்துள்ள அதேவேளையில், வருமான வரி ரீஃபண்டும் அதிகரித்துள்ளது.

கடந்த 2013-ஆம் ஆண்டு 3.8 கோடி வருமான வரிக் கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இது 2024-இல் 8.89 கோடியாக 133 சதவீதம் அதிகரித்தது. இதற்கு வரி நிா்வாகத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களே காரணம்’ என்று தெரிவித்தன.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest