page

இந்தியா – அமெரிக்கா இடையிலான வர்த்தகம் குறித்து இருநாட்டு அமைச்சர்களும் முரணாகப் பேசியிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் குறித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பேசுகையில், பிரதமர் மோடியும் அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் இந்தாண்டு நவம்பர் மாதத்துக்குள் ஒரு நல்ல ஒப்பந்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர். வர்த்தக ஒப்பந்த விவாகரத்தில் மிகவும் நல்ல முறையில் விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருதரப்பிலும் திருப்தியடைந்துள்ளனர் என்று தெரிவித்தார்.

இருப்பினும், இந்தியாவுடனான வர்த்தகம் குறித்து அமெரிக்க வர்த்தக அமைச்சர் ஹாவர்ட் லூட்னிக் பேசுகையில், ரஷியாவுடன் எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தினால் மட்டுமே, வர்த்தகப் பிரச்னைகள் தீர்க்கப்படும் என்று தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தக ஒப்பந்தமானது, நல்ல முறையில் நடந்து வருவதாக இந்திய அமைச்சர் கூறி வரும்நிலையில், அமெரிக்க அமைச்சர் முரணாக கூறியிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest