page

கார்களின் விலைக் குறைப்புப் பட்டியலில் பிரதமரின் படம் வைக்குமாறு மத்திய அமைச்சகம் வலியுறுத்துவதாக காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

ஜிஎஸ்டி வரிக் குறைப்புக்கும் அதற்கு முன்னதாக இருந்த விலையின் பட்டியலை சுவரொட்டியாக வாகன விற்பனை நிலையங்களில் வைக்க வேண்டும் என்றும், அச்சுவரொட்டியில் பிரதமர் மோடியின் படமும் இடம்பெற்றிருக்க வேண்டும் என்றும் இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கத்துக்கு (SIAM) கனரக தொழில்துறை அமைச்சகம் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்த நடவடிக்கை குறித்து காங்கிரஸ் வெளியிட்டுள்ள பதிவில், தங்களுக்கும் அறிவிப்பு வெளியாவதற்குள் தங்களின் தயாரிப்புகளிலும் பிரதமர் மோடியின் படத்தை வைக்க காலணி மற்றும் உள்ளாடை நிறுவனங்கள் தயாராவதாக விமர்சித்துள்ளது.

மின்னணு பொருள்கள், வாகனங்கள் மீதான மத்திய அரசின் வரி குறைப்பு மக்களிடையே நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

1,200சிசி-க்கு உள்பட்ட பெட்ரோல் கார்கள், சிஎன்ஜி கார்கள் மற்றும் 1500 சிசி-க்கு உள்பட்ட டீசல் கார்களுக்கு மற்றும் மூன்று சக்கர, இரு சக்கர வாகனங்களுக்கு ஜிஎஸ்டி வரி 28% லிருந்து 18% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

Automakers asked to GST posters with PM’s photo with PM Modi’s photo

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest