rahul-gandhi

அதிகாலை 4 மணிக்கு வாக்குத் திருட்டு நடந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

மத்திய பாஜக அரசுடன் சேர்ந்து தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் ஈடுபட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.

கடந்த மாதம் இதுகுறித்த ஆதாரங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராகுல் நேற்று செய்தியாளர் சந்திப்பில், வாக்காளர் பட்டியலில் பெயர்கள் நீக்கப்பட்டது, சேர்க்கப்பட்டது குறித்த மேலும் ஆதாரங்களைக் காட்டினார்.

கர்நாடகத்தில் உள்ள ஒரு தொகுதியில் மட்டும் 6,000-க்கும் அதிகமான வாக்காளர்களை நீக்க முயற்சி நடந்ததாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இதற்கு தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளதே தவிர, ராகுலின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கவில்லை என்று காங்கிரஸ் கூறியுள்ளது.

ராகுல் நேற்று பேசுகையில், வெறும் 36 நொடிகளில் ஒரு விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

இந்நிலையில் நேற்று ராகுல், தான் பேசிய விடியோ ஒன்றைப் பகிர்ந்து

“அதிகாலை 4 மணிக்கு எழுந்து வெறும் 36 நொடிகளில் 2 வாக்காளர்களை நீக்கிவிட்டு பிறகு மீண்டும் தூங்கச் செல்கிறார்கள்!

வாக்குத் திருட்டு இப்படித்தான் நடக்கிறது!

தேர்தல்களைக் கண்காணிக்கும் அதிகாரி விழித்திருந்து இந்த திருட்டைப் பார்த்துக் கொண்டே இருக்கிறார், திருடர்களைப் பாதுகாக்கிறார்” என்று பதிவிட்டுள்ளார்.

Wake up at 4 am, delete voters, go to sleep: Rahul Gandhi on vote chori

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest