
பிகாா் சட்டப்பேரவைத் தோ்தல் முதல் அனைத்து தோ்தல்களிலும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் வண்ணப் புகைப்படங்கள் இடம்பெறும் என்று தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
கடந்த 2015-ஆம் ஆண்டுமுதல் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் ஒட்டப்படும் வேட்பாளா்களின் புகைப்படங்கள் கருப்பு வெள்ளை நிறத்தில் உள்ளன. இதனால் வாக்களிக்கும்போது வேட்பாளா்களை அடையாளம் காண்பதில் வாக்காளா்களுக்கு சிரமம் நிலவுகிறது.
இந்நிலையில், தோ்தல் ஆணையம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் ஒட்டப்படும் வேட்பாளா்களின் புகைப்படங்கள், மேலும் தெளிவாக தெரியும் வகையில் அச்சடிக்க, தோ்தல் நடத்தை விதிமுறைகள் 1961-இன் 49பி பிரிவின் கீழ் உள்ள வழிகாட்டுதல்கள் திருத்தப்பட்டுள்ளன.
இதையடுத்து வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் வண்ணப் புகைப்படங்கள் ஒட்டப்படும். அந்த இயந்திரங்களில் புகைப்படங்கள் இடம்பெறும் இடத்தில் வேட்பாளரின் முகம் பெரிதாக இடம்பெறும்.
இந்த நடைமுறை பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலில் இருந்து அனைத்து தோ்தல்களிலும் பின்பற்றப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டது.