
அதிமுகவுடன் உரிமை மீட்புக் குழுவை இணைக்க வாய்ப்பிருந்தால் எந்த நிபந்தனையும் இன்றி இணைவேன் என்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலின்போது அதிமுக தனித்துப் போட்டியிட்ட நிலையில், பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் இணைந்தனர்.
இதனிடையே, அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்துள்ளது. மேலும், தமிழகத்தில் அதிமுக தலைமையில்தான் தேசிய ஜனநாயகக் கூட்டணி போட்டியிடும் என்று பாஜக மூத்த தலைவர் அமித் ஷா அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் இன்று ஆலோசனையில் ஈடுபட்டார்.
இந்த ஆலோசனையில் பேசிய ஓபிஎஸ், அதிமுகவுடன் உரிமை மீட்புக் குழுவை இணைக்க வாய்ப்பிருந்தால் எந்த நிபந்தனையும் இன்றி இணைப்போம் எனத் தெரிவித்துள்ளார்.