E0AE9AE0AF80E0AEAEE0AEBEE0AEA9E0AF8D

2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை மையமாகக் கொண்டு தவெக தலைவர் விஜய் தனது தேர்தல் சுற்றுப்பயணப் பிரசாரத்தை வரும் செப்டம்பர் 13 ஆம் தேதி திருச்சியில் தொடங்கி டிசம்பர் மாதம் 20ஆம் தேதி (20.12.2025) சனிக்கிழமை வரை தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மேற்கொள்ள இருக்கிறார்.

TVK மதுரை மாநாடு - விஜய்
TVK மதுரை மாநாடு – விஜய்

மொத்தம் 15 நாள்கள், ஒவ்வொரு வாரச் சனிக்கிழமைகளில் இந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் நடைபெறவிருக்கின்றன. திருச்சி மரக்கடை பகுதி எம்.ஜி.ஆர். சிலை அருகே வருகிற 13-ந்தேதி த.வெ.க. தலைவர் விஜய் பேசுவதற்கு 23 நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.

திருச்சியில் சுற்றுப்பயணத்தைத் தொடங்கும் விஜய் அடுத்ததாக பெரம்பலூர் செல்ல திட்டமிட்டுள்ளார். பெரம்பலூரில் விஜய் சுற்றுப்பயணம் செய்ய அனுமதி இன்னும் அளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

சீமான்
சீமான்

TVK Vijay: சுற்றுப்பயணத்தை துவங்கும் விஜய்; வெளியான அதிகாரப்பூர்வ அட்டவணை

இதுகுறித்துப் பேசியிருக்கும் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், “ரோடு ஷோ, கூடு ஷோ எனக் கை காட்டி செல்வது மக்கள் சந்திப்பு கிடையாது. மக்கள் பிரச்னைக்காக, மக்களுடன் நேரடியாகச் சென்று நிற்பதுதான் உண்மையான மக்கள் சந்திப்பு. இது வேட்டையாட வரும் சிங்கம் அல்ல. வேடிக்கை காட்ட வரும் சிங்கம்.

பாரதிய ஜனதா கட்சிக் கொள்கை எதிரி என்றால், இனப்படுகொலை செய்த காங்கிரஸ் கொள்கையில் விஜய்க்கு உடன்பாடு இருக்கிறதா? திமுக அரசியல் எதிரி என்றால் அதிமுக விஜய்க்கு அரசியல் நண்பனா? தவெக விஜய்யின் நிலைப்பாடு தெளிவாக இல்லை” என்று பேசியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest