UPSC_CSE_Topper_List_1745313288907_1745313296915

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் சுற்றுப் பயணத்துக்கான பிரச்னையிலேயே அக்கட்சியினர் திணறுவதாக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

தவெக தலைவர் விஜய்யின் சுற்றுப் பயணத்துக்கு அனுமதி வழங்குவதில் பிரச்னை நிலவுவதாக எழும் குற்றச்சாட்டு குறித்து பாஜக தலைவர் அண்ணாமலையிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதுகுறித்து, அண்ணாமலை பேசுகையில்,

“தவெக தலைவர் விஜய்யின் சுற்றுப் பயணத்தின்போது, கூட்டத்துக்கு அதிகமானோர் வருகை தருகின்றனர். ஆனால், வரக்கூடியவர்கள் பொதுச்சொத்துக்கு எவ்விதச் சேதமும் ஏற்படுத்தாமல், அமைதியான முறையில் செல்ல வேண்டும்.

தூத்துக்குடியில் அனுமதி வழங்க இன்று கோரியபோது, திருச்சியில் உண்டான பொதுச்சொத்து சேதத்தை காவல்துறையினர் விவரித்துள்ளனர். மேலும், அதுபோல இங்கு கூடாது என்றும் கூறியுள்ளனர்.

வரக்கூடிய கூட்டத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்து, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் கொண்டு செல்வது விஜய்யின் கட்சிக்கும் பொறுப்பு உள்ளது. அதேபோல, அவர்களுக்கு அனுமதியளிக்க அரசுக்கும் பொறுப்பு உள்ளது. பாஜகவுக்கும் அனுமதி அளிப்பதில்லை.

அரசியல் கட்சியாக வளர வேண்டுமென்றால், இதையெல்லாம் சமாளித்தால்தான் ஆட்சிக்கு வர முடியும்; ஜெயிக்க முடியும். ஆனால், இதனைச் சமாளிக்கவே விஜய்யின் கட்சியில் குட்டிக்கரணம் போடுகிறார்கள்.

விஜய்யின் கட்சியானது, அடுத்தக்கட்டத்துக்கு செல்ல வேண்டுமென்றால், இதனையெல்லாம் சமாளித்துத்தான் வளர வேண்டும்’’ என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க: திமுகவில் சேர்ந்தது கூட்டணி கிடையாது: கமல்ஹாசன்

BJP Leader Annamalai criticizes TVK

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest