
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அகந்தையுடன் பேசுவதாகவும் அவருக்குப் பின்னால் பாஜக இருப்பதாகவும் பேரவைத் தலைவர் அப்பாவு கூறியுள்ளார்.
நெல்லையில் செய்தியாளர்ளுடன் பேசி அவர்,
“தவெக தலைவர் விஜய்க்கு கொஞ்சம் அகந்தை அதிகமாக இருக்கிறது. ஒரு நடிகர் கட்சி தொடங்கியிருக்கிறார். அவர் சினிமால பேசுவது போல பேசுகிறார்.
முதல்வரை மிரட்டும் தொனியில் பேசுவதில் இருந்தே விஜய்க்கு பின்னால் பாஜக இருப்பது தெளிவாகத் தெரிகிறது.
அரசியல் அடிச்சுவடு பற்றி இன்னும் அவருக்குத் தெரியவில்லை. அமித் ஷா, மோடி என மரியாதையின்றி குறிப்பிடுகிறார். பிரதமர், மத்திய அமைச்சர்கள், முதல்வர் என ஒவ்வொருவருக்கான விதிகள், நெறிமுறைகள் வெவ்வேறு.
மத்திய அரசே சிலரை கட்சி தொடங்கவைத்து ஆட்சிக்கு நெருக்கடி கொடுக்கின்றனர். விஜய் போன்றவர்கள் கண்ணியக்குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்” என்று பேசியுள்ளார்.
TN Assembly speaker Appavu says that TVK Leader Vijay speaks arrogantly; BJP is behind him: Appavu
இதையும் படிக்க | சென்னை ஜிஎஸ்டி அலுவலகம், வானிலை ஆய்வு மையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!