Capture-1

நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவான கிங்டம் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் தேவரகொண்டா அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமானார். கடைசியாக, இவர் கல்கி 2898 ஏடி எனும் திரைப்படத்தில் அர்ஜுனர் பாத்திரத்தில் நடித்திருந்தார்.

தற்போது, நடிகர் விஜய் தேவரகொண்டா ஜெர்ஸி படத்தின் இயக்குநர் கௌதம் தின்னனுரி இயக்கத்தில் கிங்டம் எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

சமூகப் பிரச்னையை முன்வைத்து திரில்லர் பாணியில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்தப் படம் ஜூலை 31 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளனர். அதிரடி ஆக்சன் நிறைந்த காட்சிகள் இடம்பெற்றுள்ளதால் இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

actor vijay devarakonda’s kingdom movie trailer out

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest