
விஜய் பாராட்டியதைத் தொடர்ந்து பன் பட்டர் ஜாம் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக நடிகர் ராஜூ ஜெயமோகன் தெரிவித்துள்ளார்.
நடிகர் ராஜூவ் ஜெயமோகன் நடிப்பில் உருவாகியுள்ள பன் பட்டர் ஜாம் திரைப்படம் வெளியாகி தமிழகத்தின் பல்வேறு திரையரங்குகளில் ஓடி வருகிறது. இந்த நிலையில் நடிகர் ராஜூ, இயக்குநர் ராகவ் மிர்தாத் உள்ளிட்ட படக்குழுவினர் நெல்லை சந்திப்பு ராம் சினிமாஸ் திரையரங்கில் ரசிகர்களுடன் இத்திரைப்படத்தை கண்டு களித்தனர். தொடர்ந்து படக்குழுவினர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ராஜூ ஜெயமோகன், முதன் முதலில் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் கிடைத்துள்ளது. நெல்லையில் பிறந்த எனக்கு இந்த திரையரங்கில் படங்களைப் பார்த்த அனுபவம் உள்ளது. நான் நடித்த முதல் படம் இங்கு திரையிடப்பட்டுள்ளது மிகவும் மகிழ்ச்சியாக பார்க்கிறேன்.
தற்போது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் பன் பட்டர் ஜாம் திரைப்படத்திற்கும் ரசிகர்கள் டிக்கெட் பெற்று திரைப்படத்தை பார்க்கும் நிலை மாறி உள்ளது. இந்த படத்தில் வெளியான ஒரு காட்சியை பார்த்துவிட்டு நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் பாராட்டியதைத் தொடர்ந்து இந்த படம் மக்கள் மத்தியில் கூடுதல் பலத்தை ஏற்படுத்தியுள்ளது.
திரைப்படமாகும் நரேன் கார்த்திகேயன் வாழ்க்கை!
மக்கள் பார்க்க ஆர்வமாக வரும் நிலையில் இந்த படம் திரையிடப்பட்ட திரையரங்குகளும் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் நடிகைகளுக்கு பஞ்சமில்லை தமிழகத்தில் உள்ள புதுமுக நடிகைகளும் திறமை வாய்ந்தவர்களாக உள்ளனர். தமிழ் நடிகைகளுடன் நடிப்பதற்கு நான் இன்னும் தயாராக வேண்டும். அடுத்தடுத்து இரண்டு புதிய படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகியுள்ளது. விரைவில் அதற்கான அறிவிப்புகள் வெளியாகும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.