
விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு முதல்வர் மீது நம்பிக்கை இல்லை என் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அளித்த பேட்டியில் கூறியதாவது: கவின் ஆணவக்கொலை வழக்கை விசாரிக்கும் சிபிசிஐடி மீது நம்பிக்கை இல்லை. உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து விசாரிக்க வேண்டும் என விசிக தலைவர் தொல் திருமாவளவன் கூறுவது சிபிசிஐடியையும், காவல்துறையையும் கையில் வைத்திருக்கும் முதல்வர் மீது அவருக்கு நம்பிக்கை இல்லை என்றுதான் அர்த்தம்
மக்களுடைய வரிப் பணத்தை வீணாக திமுக கட்சியில் பயன்படுத்துவதை நீதிமன்றம் சுட்டிக்காட்டி உள்ளது. ஐஏஎஸ் அதிகாரிகளை பயன்படுத்த எவ்வளவோ துறைகள் உள்ள நிலையில் திமுக கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர்களாக்கி இருப்பதை உயர் நீதிமன்றம் கண்டித்தது வரவேற்கத்தக்கது. வன்கொடுமை சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று முதலில் நான்தான் தெரிவித்தேன். யார் தவறு செய்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பொழுதும் கூறுகிறேன்.
வாக்காளர் பட்டியலில் என் பெயர் இல்லை! – தேஜஸ்வி யாதவ் பரபரப்பு குற்றச்சாட்டு
சாத்தான்குளம் லாக்அப் மரண வழக்கில் உரிய விசாரணை வேண்டும் என்று கூறிய திமுக சிவகங்கை லாக்அப் மரண வழக்கில் என்ன செய்கிறது. ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் தூண்டுதலால் தான் அந்த மரணம் நிகழ்ந்ததாக பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. அவர்கள் போன்றவர்கள் காவல் துறையில் இருக்கும் வரை சட்டம் ஒழுங்கு சரியாக இருக்காது. திறனற்ற காவல் துறையாகத்தான் உள்ளது. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.