வரலாற்று சாதனை படைத்த சுபான்ஷு சுக்லா.அமெரிக்காவின் கலிஃபோா்னியா அருகே கடல்பகுதியில் பாராசூட் உதவியுடன் டிராகன் விண்கலம் வெற்றிகரமாக தரை இறங்கியதையடுத்து லக்னோவில் கொண்டாடி மகிழந்த சுபான்ஷு சுக்லா குடும்பத்தினர்.வெற்றிகரமாக பூமிக்கு திரும்பிய சுபான்ஷு சுக்லாவின் இந்த பயணம் இந்தியாவின் விண்வெளி பயணத்திற்கு ஒரு பெருமையான தருணமாகும். டிராகன் விண்கலம் வெற்றிகரமாக தரை இறங்கியதையடுத்து செல்ஃபி எடுத்து மகிழந்த சுபான்ஷு சுக்லா குடும்பத்தினர்.திட்டமிடப்பட்ட நேரத்துக்கு மாறாக 10 நிமிட தாமதத்துடன் ‘டிராகன் கிரேஸ்’ விண்கலம் மாலை 4:45 மணி இந்திய நேரப்படி – சா்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து பிரிந்து, பூமி நோக்கிப் புறப்பட்டது.லக்னோவில் ஸ்பேஸ்-எக்ஸ் விண்கலம் தரையிறங்கியதைக் கொண்டாடிய மாணவர்கள்.