mkstalin

தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் மின் வாகன உற்பத்தி தொழிற்சாலையை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

வின்ஃபாஸ்ட் ஆலையை திறந்து வைத்து காரில் முதல்வர் ஸ்டாலின் கையெழுத்திட்டார். முதற்கட்டமாக ரூ.1,119 கோடியில் 114 ஏக்கர் நிலத்தில் வின்ஃபாஸ்ட் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது.

வங்க மொழியை வங்கதேச மொழி எனக் குறிப்பிடுவதா? முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

ஆலையில் முதற்கட்டமாக ஆண்டுக்கு 50,000 மின்சார வாகனங்களை உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், கீதா ஜீவன், மனோ தங்கராஜ் தூத்துக்குடி எம்.பி. கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

CM Stalin inaugurated the Vinfast electric vehicle manufacturing plant in Thoothukudi today.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest