newindianexpress2025-05-07rcisw8qeKempegowdaInternationalairportEPS

விமானக் கட்டணங்கள் அவ்வப்போது கடுமையாக உயர்த்தப்படுவதை மத்திய அரசு ஒழுங்குமுறைப்படுத்துவதில்லை என்று அத்துறையின் இணை அமைச்சர் முரளீதர் மோஹோல் பதிலளித்துள்ளார்.

இதுதொடர்பாக மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் கனிமொழி என்.வி.என்.சோமு எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் முரளீதர் மோஹோல் அளித்துள்ள எழுத்துபூர்வ பதிலில், “விமானக் கட்டணங்கள் என்பது சேவை இயக்கப்படும் பருவகாலம், விடுமுறை நாட்கள், பண்டிகைகள், விமான எரிபொருளின் விலை ஆகியவற்றை அடிப்படைவாக வைத்து நிர்ணயிக்கப்படுகின்றன. உள்ளூர் மற்றும் சர்வதேச விமான நிறுவனங்கள் நிர்ணயிக்கும் கட்டணங்களை மத்திய அரசு ஒழுங்குப்படுத்துவதில்லை.

விமான போக்குவரத்து தலைமை இயக்குநரகத்தின் கட்டண கண்காணிப்பு பிரிவு, விமான நிறுவனங்கள் நிர்ணயித்த கட்டணங்களின்படி பயணச்சீட்டு வழங்கப்படுகிறதா என்பதை மட்டும் உறுதி செய்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest