ahemadabad-plane-crash

அகமதாபாத் விமான விபத்துக்கு காரணம் யார்? என்பது குறித்து அமெரிக்க செய்தி நிறுவனத்துக்கு விமான விபத்து புலனாய்வுப் பிரிவு கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

260 பேர் பலியான ஏர் இந்தியா விமான விபத்தில் ‘விமானியின் பங்கு என்ன?’ என்பது குறித்தும், அகமதாபாத் ஏர் இந்தியா விபத்துக்கு சில நொடிகளுக்கு முன், எரிபொருள் சுவிட்ச் அணைக்கப்பட்டுள்ளது. மூத்த பைலட் சுமீத் சபர்வாலிடம் துணை பைலட் விசாரித்தபோதும் அவர் அமைதியாக இருந்ததே விபத்துக்கு காரணம் என அமெரிக்காவைச் சேர்ந்த ‘தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ செய்தித்தாளின் அறிக்கையை இந்தியாவின் விமான விபத்து புலனாய்வுப் பிரிவு (ஏஏஐபி) கடுமையாக கண்டித்துள்ளது.

இதுகுறித்து ஏஏஐபி வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த அறிக்கை சரிபார்க்கப்படாதது. இறுதி அறிக்கை வெளியிடப்படும் வரை காத்திருக்க வேண்டும். ஏர் இந்தியா விபத்து குறித்த முதற்கட்ட அறிக்கையில், என்ன நடந்தது? என்பது குறித்த தகவல்களை பெறவே, இந்தச் சோதனை இன்னும் முழுமையடையவில்லை. விபத்தில் பலியான பயணிகள், விமானப் பணியாளர்கள் மற்றும் பலியான மருத்துவக்கல்லூரி மாணவர்களின் இழப்புகளையும் மதிக்க வேண்டியது நம்முடைய அவசியம்.

சர்வதேச ஊடகங்கள் சில, சரிபார்க்கப்படாத அறிக்கைகள் மூலம் மீண்டும் மீண்டும் முடிவுகளை எடுக்க முயற்சிப்பதும், குறிப்பாக விசாரணை நடந்து கொண்டிருக்கும் போது, இதுபோன்ற நடவடிக்கைகள் பொறுப்பற்றவைகளாகும்.

இந்திய விமான விபத்து புலனாய்வு பிரிவின் நேர்மையை குறைத்து மதிப்பிட்டு, கட்டுக் கதைகள் பரப்புவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களையும் ஊடகங்களையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளனர்.

முன்னதாக, ஜூன் 12 ஆம் தேதி ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதற்கு விமானியின் தவறு காரணமாகத்தான் என்று கூறப்படும் என்று அறிக்கை வெளியிடப்பட்டதன் பின்னணியில் விமான விபத்து புலனாய்வுப் பிரிவு அறிக்கை வெளியிட்டது.

மேலும், கறுப்பு பெட்டியில் இருந்து வெளியிடப்பட்ட தகவலின் அடிப்படையில் இரு விமானிகளுக்கு இடையேயான உரையாடலில், விமானத்தின் என்ஜின்களுக்கு எரிபொருள் செல்லும் சுவிட்சுகளை கேப்டன் அணைத்துவிட்டதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Unverified: Probe body rejects US media report on ‘pilot’s role’ in Air India crash

இதையும் படிக்க : எரிசக்திக்கே முன்னுரிமை..! நேட்டோவின் எச்சரிக்கையை நிராகரித்த இந்தியா!

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest