AP25193597768825

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் மகளிா் ஒற்றையா் பிரிவில், போலந்தின் இகா ஸ்வியாடெக் வெற்றி பெற்றார்.

முன்னதாக அரையிறுதிச்சுற்றில், போட்டித்தரவரிசையில் 8-ஆம் இடத்திலிருந்த ஸ்வியாடெக் 6-2, 6-0 என்ற நோ் செட்களில் மிக எளிதாக, சுவிட்ஸா்லாந்தின் பெலிண்டா பென்சிச்சை தோற்கடித்தாா்.

இந்த வெற்றியின் மூலமாக, விம்பிள்டனில் முதல்முறையாக இறுதிச்சுற்றை அடைந்த ஸ்வியாடெக், ஒட்டுமொத்தமாக தனது 6-ஆவது கிராண்ட்ஸ்லாம் சாம்பியன்ஷிப் ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளார்.

இகா ஸ்வியாடெக்

2024-இல் ‘ஹாட்ரிக்’ பிரெஞ்சு ஓபன் சாம்பியனான ஸ்வியாடெக், அதன் பிறகு எந்தவொரு போட்டியிலுமே வெற்றி பெறவில்லை. இந்த நிலையில், தாம் அவ்வளவாக மிளிராத புல்தரை கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டனில் அவா் இறுதிச்சுற்றுக்கு பங்கேற்றார்.

இறுதிச்சுற்றில் அமெரிக்க வீராங்கனை அமாண்டா அனிசிமோவாவை 6-0, 6-0 என்ற கணக்குகளில் வீழ்த்தி ஸ்வியாடெக் பட்டம் வென்றார். விம்பிள்டன் பட்டம் வென்ற முதல் போலந்து வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

இதையும் படிக்க: சென்னை கூவம் ஆற்றில் இளைஞர் சடலம்! ஆந்திர அரசியல் அட்டூழியம்! நடந்தது என்ன?

Wimbledon 2025: Swiatek wins title after crushing 6-0, 6-0 defeat of Anisimova

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest