maruti

நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பாளரான மாருதி சுசுகி இந்தியா, சரக்கு மற்றும் சேவை வரி பலன்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது. இதன் மூலம் ஸ்விஃப்ட், டிசையர், பலேனோ, ஃபிராங்க்ஸ் மற்றும் பிரெஸ்ஸா உள்ளிட்ட மாடல்களின் விலையை ரூ.1.10 லட்சம் வரை குறைத்துள்ளது.

புதிய திருத்தப்பட்ட விலைகள் ஜிஎஸ்டி விகிதங்கள் அமலுக்கு வரும் செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றது நிறுவனம்.

மாருதி நிறுவனம் தனது கார்களை அரினா மற்றும் நெக்ஸா டீலர்ஷிப்கள் மூலம் விற்பனை செய்து வருகிறது.

அரினா ஷோரூமில் ஆல்டோ கே10, எஸ்-பிரஸ்ஸோ, வேகன்-ஆர், செலெரியோ, ஈகோ, ஸ்விஃப்ட், டிசையர், பிரெஸ்ஸா மற்றும் எர்டிகா ஆகிய வாகனங்கள் இதில் அடங்கும்.

நெக்ஸா ஷோரூமில் இக்னிஸ், பலேனோ, ஃபிராங்க்ஸ், ஜிம்னி, கிராண்ட் விட்டாரா, எக்ஸ்எல்-6 மற்றும் இன்விக்டோ உள்ளிட்டவை அடங்கும்.

மாருதிக்கு நாடு முழுவதும் 4,000க்கும் மேற்பட்ட அரினா ஷோரூம்களும் 700க்கும் மேற்பட்ட நெக்ஸா ஷோரூம்களும் உள்ளன.

சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட காம்பேக்ட் எஸ்யூவி வரிசையில் புதிய விக்டோரிஸ், அரினா ஷோரூம்களில் விற்கப்படும் என்றும், அதற்கும் புதிய ஜிஎஸ்டி விகிதங்களின்படி விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன என்றது.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest