ram-charan

இந்தியாவில் நடைபெறும் வில்வித்தைக்கான விளம்பர தூதராக நடிகர் ராம் சரண் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆர்ஆர்ஆர் படத்தில் நடிகர் ராம் சரண் அல்லூரி சீதாராம ராஜு கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தார். தற்போது, பெட்டி எனும் படத்தில் நடித்து வருகிறார்.

வில்வித்தைக்கான உலகின் முதல் லீக் இந்தியாவில் அறிமுகம்

உலகத்திலேயே முதல்முறையாக வில்வித்தைக்கான லீக் போட்டி இந்தியாவில்தான் நடைபெற இருக்கிறது.

இந்தப் போட்டிகளை ஏபிஎல் (ஆர்ச்சரி பிரீமியர் லீக்) என்ற பெயரில் இந்தியாவின் வில்வித்தைக்கான அமைப்பு நடத்துகிறது.

இந்தப் போட்டியில் மொத்தமாக 6 அணிகள் பங்கேற்கின்றன. அதில் 36 இந்திய வீரர்களும், 12 வெளிநாட்டு வீரர்கள் கலந்துகொள்கிறார்கள்.

ஓர் அணிக்கு 8 பேராக (4 ஆண்கள் 4, பெண்கள்), மொத்தம் 48 பேர் விளையாடுகிறார்கள்.

இந்தப் போட்டிகள் அக்.2 முதல் அக்.12ஆம் தேதிவரை நடைபெற இருக்கிறது. நேரலையாக துர்தர்ஷன் தொலக்காட்சியிலும், ஜியோ ஹாட்ஸ்டாரிலும் பார்க்கலாம்.

வில்வித்தை என்பது கவனம், துல்லியம், வலிமை!

விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ள ராம் சரண் கூறியதாவது:

வணக்கம். என்னை ஏபிஎல் தொடரின் விளம்பர தூதராக நியமித்தமைக்கு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

உலகிலேயே முதல்முறையாக இந்த லீக் போட்டி நமது நாட்டின் பழமையான, வலிமையான விளையாட்டிற்கான அற்பணிக்காக இருக்கிறது.

வில்வித்தை என்பது கவனம், துல்லியம், வலிமையைப் பிரதிபலிக்கிறது. இதன் மதிப்புகள் களத்திலும் வெளியேவும் இணைந்துள்ளது.

உலகம் முழுவதும் உள்ள வீரர், வீராங்கனைகளுக்கு இந்தத் தொடர் உத்வேகம் அளிக்குமென நம்புகிறேன். வில்லை எடுத்து, நோக்கத்தோடு எய்துங்கள், சிறப்பை அடையுங்கள் என்றார்.

Ram Charan Named Brand Ambassador for Inaugural Archery Premier League

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest