
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ‘ஸ்டிக் டு கிரிக்கெட்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியிருந்தார்.
அந்தப் பேட்டியில் பல்வேறு சுவாரஸ்யத் தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். அதில் நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் விளம்பரங்கள் மூலம் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் என்பது குறித்து மனம் திறந்து பேசினார்.
“எம்.எஸ். தோனி, விராட் கோலி, சச்சின் டெண்டுல்கர் போன்ற வீரர்கள் 15 முதல் 20 விளம்பரங்களுக்கு மேல் நடிக்கிறார்கள். விளம்பர ஒப்பந்தங்கள் மூலமாகவே ரூ.100 கோடிக்கு மேல் சம்பாதிக்கிறார்கள். விளம்பரங்களில் நடிப்பது எளிதான ஒன்று. அதிக நேரம் தேவைப்படாது.
நான் சில விளம்பரங்களில் நடித்திருக்கிறேன். இன்றைய சமூக ஊடக யுகத்தில் செய்தி சேனல்கள் அவர்களையே சுற்றிச் சுற்றி வருவதால், நீங்கள் அவர்கள் வராத ஒரு பகுதிக்குச் செல்ல வேண்டும்.
நீங்கள் 10 ஆண்டுக்காலம் அங்கேயே இருந்தால், அது வேறு ஒரு பாதிப்பை ஏற்படுத்தும். சச்சின் ஒரு நடைமுறையை அமைத்திருக்கிறார். அவருக்கு அடுத்து தோனி, பின்னர் விராட், ரோஹித் என அவரவர் தன் தனிப் பாதையில் வருவார்கள். இதுபோன்ற செலிபிரட்டிகளுக்குத் தனியுரிமை என்பதெல்லாம் இல்லை. அவர்கள் பொதுச் சொத்து. என்ன நடந்தாலும் நீங்கள் சிறப்பாகச் செயல்படுவீர்கள் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.” என்றார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…