WhatsApp-Image-2025-07-06-at-18.26.51-1

விழுப்புரம் மாவட்டம் பெரியதச்சூர் அருகேயுள்ள விநாயகபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தனியார் பேருந்து ஓட்டுநர் மாரிமுத்து. இவருக்கு வலது கால் முட்டியில் ஜவ்வு கிழிந்த நிலையில் அதிக வலியால் அன்றாடம் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இதனால் மாரிமுத்து விழுப்புரம் நான்கு முனை சந்திப்பிலுள்ள விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அப்போது மருத்துவர்கள் பரிசோதனை செய்த பிறகு, மருத்துவர் சரவணன் தலைமையிலான குழுவினர் மாரிமுத்துவுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட நோயாளி
பாதிக்கப்பட்ட நோயாளி

அதனை ஏற்று மாரிமுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் நான்கு நாள்கள் மாரிமுத்துவிற்கு அறுவை சிகிச்சைக்கான முன் சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பிறகு மாரிமுத்து அறுவை சிகிச்சை செய்வதற்காக அறுவை சிகிச்சை அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்பொழுது சரவணன் தலைமையிலான மருத்துவக் குழுவினர், அறுவை சிகிச்சை செய்ய கால் முட்டியில் கத்தியால் கிழித்த போது வலது காலில் அறுவை சிகிச்சை செய்வதற்குப் பதிலாக இடது காலில் அறுவை சிகிச்சை செய்யத் திறந்தது தெரியவந்தது.

இதனையடுத்து அறுவை சிகிச்சை செய்யாமல் தையல் போட்டுள்ளனர். அறுவை சிகிச்சைக்காகச் செலுத்தப்பட்ட மயக்கம் தெளிந்து மாரிமுத்து மருத்துவர்களிடம், தனக்கு வலது காலில் அறுவை சிகிச்சை செய்வதற்குப் பதிலாக இடது காலில் அறுவை சிகிச்சை செய்துள்ளீர்கள் ஏன் எனக் கேட்டுள்ளனர்.

அதற்கு மருத்துவர் தவறுதலாக இடது காலில் சிகிச்சை செய்யத் திறந்துவிட்டதாகவும் அதன்பின்னர் அறுவை சிகிச்சை செய்யாமல் மூடிவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

மருத்துவர்கள் தவறாகச் சிகிச்சை செய்துவிட்டதாக அவரது குடும்பத்தினர்கள் மருத்துவமனையில் வாக்குவாதம் செய்து அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதோடு, உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டபோது, வலது காலில் ஜவ்வு கிழிந்ததற்கு அறுவை சிகிச்சை செய்யக் கிழித்தபோது இடது காலில் கிழிக்கப்பட்டது தெரிய வரவே சிகிச்சை செய்யாமல் தையல் போட்டு விட்டதாக மருத்துவமனை நிர்வாகத்தினர் மற்றும் மருத்துவர் சரவணன் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இவ்வாறான மருத்துவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest