
விவோ எக்ஸ் 200 எஃப்இ ஸ்மார்ட்போன் கடந்த வாரம் இந்தியாவில் அறிமுகமான நிலையில், இதன் விற்பனை நாளை (ஜூலை 23) முதல் இந்திய சந்தைகளில் தொடங்கவுள்ளது.
சிறந்த போட்டோகிராபி, பேட்டரி திறன், திரையின் தரம் ஆகியவற்றிற்காக இந்த ஸ்மார்போன் சிறப்பு வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
அதிக பிக்சல் திறனுடன் திரை சுமூகமாக இயங்கும் வகையில் 120Hz திறன் கொண்டது. இதன் எடை 186 கிராம்.
சீனாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் விவோ நிறுவனம், எக்ஸ் ஃபோல்ட் 5 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ததைத் தொடர்ந்து ஜூலை 14ஆம் தேதி விவோ எக்ஸ் 200 எஃப்இ என்ற ஸ்மார்ட்போனையும் இந்தியாவில் அறிமுகம் செய்தது.
எனினும், வாடிக்கையாளர்களுக்கான விற்பனை நாளை முதல் அனைத்து விவோ கிளைகளிலும், இணைய விற்பனை தளங்களிலும் தொடங்கவுள்ளது.
விவோ எக்ஸ் 200 எஃப்இ சிறப்பம்சங்கள்
-
விவோ எக்ஸ் 200 எஃப்இ ஸ்மார்ட்போனானது, மீடியாடெக் டைமன்சிட்டி 9300+ புராசஸர் உடையது.
-
6.31 அங்குல அமோலிட் திரை கொண்டது. 2640×1216 பிக்சல் திறனுடன் திரை சுமூகமாக இருக்கும் வகையில் 120Hz திறன் வழங்கப்பட்டுள்ளது. திரை அதிக பிரகாசமாக இருக்கும் வகையில்5000 nits திறன் கொடுக்கப்பட்டுள்ளது.
-
12GB+256GB மற்றும் 16GB+512GB என இரு வேரியன்ட் நினைவகத்துடன் வருகின்றன.
-
பின்புறம் 50MP கேமராவுடன் IMX921 சோனி சென்சார் வழங்கப்பட்டுள்ளது. ஜூம் வசதிக்காக 50MP கேமராவுடன் IMX882 சோனி சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது. முன்பக்க செல்ஃபிக்கும் 50MP கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இதனால், புகைப்படம் மற்றும் விடியோக்களுக்கு சிறந்தது.
-
6000mAh பேட்டரி திறனுடன் 90W வேகமாக சார்ஜ் செய்யும் வசதியும் உள்ளது.
-
மழைநீர் மற்றும் தூசு புகாத்தன்மையுடன் IP68 மற்றும் IP69 திறனுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
-
மஞ்சள், நீலம், இளஞ்சிவப்பு, சாம்பல் நிறங்களில் தயாரிக்கப்பட்டுள்ளன.
இதையும் படிக்க | ரூ.12 ஆயிரத்திற்குள் அதிக பேட்டரி திறனுடன் ஸ்மார்ட்போன்! ஓப்போ கே 13எக்ஸ்!