
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டில் மதிய உணவு இடைவேளை வரையில் இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
இங்கிலாந்து, லண்டனில் லார்ட்ஸ் திடலில் நடைபெற்றுவரும் மூன்றாவது டெஸ்ட்டில் முதல் இன்னிங்ஸில் இரு அணிகளுமே 367 ரன்கள் எடுத்தது.
இரண்டாம் இன்னிங்ஸில் இங்கிலாந்து 192 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனைத் தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 4-ஆம் நாள் முடிவில் 58 ரன்களுக்கு 4 ரன்களை இழந்தது.
இந்நிலையில், ஐந்தாம் நாளில் தொடக்கத்திலேயே இந்திய அணி ரிஷப் பந்த், வாஷிங்டன் சுந்தர் விக்கெட்டினை இழந்தது.
அதற்கடுத்து, ஜடேஜா – நிதீஷ் குமார் அதிகமான பந்துகளை எதிர்கொண்டார்கள். இங்கிலாந்து வீரர்கள் நிதீஷ் குமாரிடம் அதிகமாக பேசிப் பேசி அவரை தவறிழைக்க வைக்க முயன்றார்கள்.
இந்திய அணியின் 7-ஆவது விக்கெட் விழுந்து 14 ஓவர்களுக்குப் பிறகுதான் 8-ஆவது விக்கெட்டாக நிதீஷ் ஆட்டமிழந்தார்.
தற்போது, மதிய உணவு இடைவேளை விடப்பட்டுள்ளது. 39.3 ஓவர்களில் இந்திய அணி 112/8 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா வெற்றி பெற 81 ரன்கள் தேவை. இங்கிலாந்து வெற்றிபெற 2 விக்கெட்டுகள் மட்டுமே தேவை. வெற்றியின் விளிம்பில் இங்கிலாந்து இருக்கிறது.
ஜடேஜா வெற்றியைப் பெற்றுத் தருவாரா என இந்திய ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.