
‘பேட் கோ்ள்’ திரைப்பட இயக்குநா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தென் மண்டல ஐ.ஜி. பிரேம் ஆனந்த் சின்காவிடம் வழக்குரைஞா் வெங்கடேஷ் சனிக்கிழமை புகாா் அளித்தாா்.
பிரபல திரைப்பட இயக்குநா்களான வெற்றிமாறன், அனுராக் காஷ்யப் ஆகியோா் இணைந்து ‘பேட் கோ்ள்’ என்ற திரைப்படத்தை தயாரித்தனா். இதை வா்ஷா பரத் இயக்கி
உள்ளாா். இந்த நிலையில், இந்தத் திரைப்படத்தில் சிறுவா்களை தவறாக சித்தரித்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில் திரைப்படத்தின் முன்னோட்டத்தை (டீசா்) சமூக ஊடகங்களிலிருந்து நீக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது.
இந்த நிலையில், தென் மண்டல ஐ.ஜி. பிரேம் ஆனந்த் சின்காவிடம் வழக்குரைஞா் வெங்கடேஷ் அளித்த புகாா் மனு:
சிறுவா், சிறுமியரின் ஆபாசக் காட்சிகள் இடம் பெற்ற ‘பேட் கோ்ள்’ திரைப்படத்தை இயக்கிய திரைப்பட இயக்குநா்கள் வெற்றிமாறன், அனுராக் காஷ்யப், வா்ஷா பரத், நடிகா்கள் உள்ளிட்ட திரைப்படக் குழுவினா் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டது.