page-1

பொருளாதார வளர்ச்சியை வைத்து மக்களின் வாழ்க்கைத் தரத்தை அளவிட முடியாது என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு ஒரு டிரில்லியன் பொருளாதாரத்தை நோக்கி செல்வதாக முதல்வர் ஸ்டாலின் கூறியதுடன், பொருளாதார வளர்ச்சியிலும் இந்தியாவில் தமிழ்நாடு முதலிடம் என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், முதல்வரின் கூற்றுகளை விளம்பரங்கள் என்று விமர்சித்த எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில்,

“விளம்பர ஆட்சியில் ஒரு டிரில்லியன் பொய்கள்”

பொருளாதாரப் புள்ளி விபரங்கள் எல்லாம் ஒரு குறியீடு மட்டும்தான். பொருளாதார வளர்ச்சியோ, அதன் அடிப்படையில் மதிப்பிடப்படும் தனிநபர் வருமானமோ ஒரு குறியீடுதானே தவிர, அது மக்களின் உண்மையான வாழ்க்கைத் தரத்தைக் காட்டும் அளவுகோலாக கருத முடியாது.

எனவே, உண்மையை ஸ்டாலின் அரசு உணர்ந்து, வெற்று விளம்பரங்களைத் தவிர்த்து மக்கள் நலனில் கவனம் செலுத்த வேண்டும்.

● நீர் ஆதாரங்கள் பராமரிக்கப்படாதால், உண்மையில், விவசாயிகள் கண்ணீர் சிந்தி வருகின்றனர்.

●விவசாய விளைபொருட்களுக்கு உரிய விலை இல்லை.

●கிராமந்தோறும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலையின்றி பரிதவிக்கின்றனர்.

●நெசவாளர், மீனவர் என்று யாருமே நிம்மதியாக இல்லை.

●எல்லா இடங்களிலும் லஞ்ச, லாவண்யம் புரையோடி இருக்கிறது. விலைவாசி உயர்வு அதிகரித்துள்ளது.

●சாலை வசதிகள், குடிநீர் வசதிகள், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் மக்கள் தவிக்கிறார்கள். அரசு ஊழியர்கள் வெறுப்பின் விளிம்பில் உள்ளனர்.

●தமிழகம் முழுக்க இந்த அரசுக்கு எதிரான ஒரு வெறுப்பு அலை வீசுவதை, என் பயணத்தில் கண் எதிரே காண முடிகிறது.

●சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுக் கிடப்பதையும், திமுகவின் ரௌடிப் பட்டாளத்தின் அட்டூழியத்தைக் கண்டும் மக்கள் அச்சத்தில் உள்ளனர். பொய் சொல்லி விளம்பர சூட்டிங் நடத்தும் திமுக ஆட்சிக்கு விடைகொடுக்க மக்கள் தயாராகிவிட்டார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest