Job-search-edi

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் தூத்துக்குடி மண்டல நெல் கொள்முதல் மையங்களில் கீழ்வரும் பணிகளுக்கு தகுதியான ஆண்கள் மற்றும் பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்த விவரம் வருமாறு:

விளம்பர எண்: E1/07156/2021

பணி: பருவகால பட்டியல் எழுத்தர்

காலியிடங்கள்: 100

தகுதி: வேளாண் அறிவியல், பொது அறிவியல், பொறியியல் பிரிவுகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ. 5,285 + தினப்படி

பணி: பருவகால உதவுபவர்

காலியிடங்கள்: 100

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.5,218 + தினப்படி

பணி: பருவகால காவலர்

காலியிடங்கள்: 100

சம்பளம்: மாதம் ரூ.5,218 + தினப்படி

தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேற்கண்ட பணிகளுக்கு போக்குவரத்து படியாக ரூ.100 வழங்கப்படும். தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க முடியும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இது குறித்த விபரம் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.

வயதுவரம்பு: மேற்கண்ட பணியிடங்களுக்கு பொதுப்பிரிவினர் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் ஓபிசி பிரிவினருக்கு 2 ஆண்டுகளும், எஸ்சி,எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பத்தாரர் தங்களது முழு விபரம் அடங்கிய விண்ணப்பப் படிவத்தை தயார் செய்து, பூர்த்தி செய்து, தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

மண்டல மேலாளர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், சிப்காட் காம்ளக்ஸ்; மீளவிட்டான், மடத்தூர் (அஞ்சல்), தூத்துக்குடி மாவட்டம்

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 31.7.2025

ரூ.35,400 சம்பளத்தில் தமிழக அரசு மருத்துவமனைகளில் லேப் டெக்னீசியன் பணி

Applications are invited from eligible male and female candidates for the following posts at the Thoothukudi Zonal

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest