
வேளச்சேரியில் தண்டீஸ்வரம் கோயில் பகுதி அருகே, எதிரெதிரே வந்த அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில், ஓட்டுநர் உள்பட 8 பேர் காயமடைந்தனர்.
தண்டீஸ்வரம் கோயில் அருகே முக்கிய சாலையில், எதிர் எதிர் திசையில் வந்துகொண்டிருந்த அரசுப் பேருந்துகள் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியது. இதில், ஒரு அரசுப் பேருந்தின் ஓட்டுநர் காயமடைந்தார்.
சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றது. விபத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு, அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முக்கிய சாலையில் விபத்து நேரிட்டதால், அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அலுவலகம் செல்வோர் அவதிக்குள்ளாகினர்.