Capture-1

இயக்குநர் ஷங்கர் மகன் கதாநாயகனாகும் படத்தின் நாயகி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

ஷங்கரின் மகன் அர்ஜித் இயக்குநராகும் விருப்பத்தில் இருந்ததால் அவரை ஏ. ஆர். முருகதாஸிடம் உதவி இயக்குநராக ஷங்கர் சேர்த்துவிட்டார்.

அர்ஜித்தும் நடிகர் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றினார்.

இந்த நிலையில், அர்ஜித் இயக்குநர் அட்லியின் உதவி இயக்குநர் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளாராம். இப்படத்தை பேசன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிப்பதாகக் கூறப்படுகிறது.

தற்போது, இப்படத்தில் அர்ஜித்துக்கு ஜோடியாக நடிகை மமிதா பைஜூ ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க: சிம்புவுடனான படம் என்ன ஆனது? வெற்றி மாறன் பதில்!

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest