
ஸ்ரீகாலபைரவ மகாபூஜை! தேய்பிறை அஷ்டமி நாளில் இதைச் செய்தால் உங்கள் வேண்டுதல்கள் யாவும் நிறைவேறும்! 14-10-2025 செவ்வாய்க்கிழமை தேய்பிறை அஷ்டமி நன்னாளில் அவல்பூந்துறை ஊரை அடுத்த ராட்டைச் சுற்றிபாளையம் ஆலயத்தில் மகாகால பைரவ பூஜை நடைபெற உள்ளது.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 – 66802980/07
ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.
தலைவிதி மாற்றுவார், யம பயம் போக்குவார் காலபைரவர்!
ஈசனின் 64 வடிவங்களில் காலபைரவர் வடிவமும் ஒன்று. எதிரிகளுக்கு அச்சத்தைத் தருபவர்; தம்மை சரணடைந்த பக்தர்களை பாதுகாத்து, அனைத்து நலன்களையும் அருளக்கூடியவர்.
பிரம்மதேவனின் கர்வத்தை அடக்கி அவரின் ஒரு தலையைக் கொய்தவர். படைப்பவனே ஆனாலும் கர்வம் இருக்கக்கூடாது என்பதற்காக காலபைரவர் நிகழ்த்திய லீலை இது. சிவாலயங்களில் வடகிழக்கு மூலையில் அருள்பாலிக்கும் கால பைரவர், வறுமை நிலை வராமல் பாதுகாக்கக் கூடியவர்.
பைரவருக்கு அஷ்டமி பூஜை மிகவும் விசேஷமானது. தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு பூஜை செய்தால் ஏழேழ் தலைமுறைக்கும் நம்மை பாதுகாப்பார் என்பது நம்பிக்கை. குறிப்பாக தரித்திரம், அச்சம், வழக்குகள், குடும்பச் சிக்கல், தோல்வி, அவமானம், வீண் பழி, நஷ்டம், கடன், கண் திருஷ்டி, காரியத்தடை யாவும் நீக்குவார்.
மேலும் தேய்பிறை அஷ்டமி நாளில் பைரவரை திருமகளின் எட்டு வடிவங்களும் வணங்குவதாக ஐதீகம். தேய்பிறை அஷ்டமி நாளில் நீங்களும் வணங்கினால் திருமகளின் அனுகிரகம் பெற்று வாழ்வில் சகல சௌபாக்கியங்களும் ஐஸ்வர்யங்களும் பெற்று உயரலாம் என்பதும் நம்பிக்கை.

ஸ்ரீஆதிசங்கரரால் தோற்றுவிக்கப்பட்ட இந்த பைரவ வழிபாடு கவலைகள் நீக்கும் பரிகார வழிபாடு. ராகு-கேதுவை முப்புரி நூலாக அணிந்து, மழு, பாசம், சூலம், தண்டம் ஏந்தி வழிபட்டோருக்கு வளம் சேர்க்கும் அற்புத தெய்வம் ஸ்ரீகாலபைரவர்.
12 ராசிகளுக்கும் 27 நட்சத்திரங்களுக்கும் இவரே அதிபதி என்பதால் இவரை வணங்கினால் ஜாதக தோஷங்கள், பாவங்கள் யாவும் விலகும். அஷ்டமி நாளில் பைரவரை வணங்கிய எவரும் வாழ்வில் துன்பமோ அச்சமோ அடைவதே இல்லை.
காலத்தின் கடவுளான கால பைரவர் தலை விதியை மாற்றக்கூடியவர். துன்பப்படும் யாரும் இவரை வரும் தேய்பிறை அஷ்டமி நாளில் வழிபடலாம்.
முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 – 66802980/07
ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.
14-10-2025 செவ்வாய்க்கிழமை தேய்பிறை அஷ்டமி நன்னாளில் அவல்பூந்துறை ஊரை அடுத்த ராட்டைச் சுற்றிபாளையம் ஆலயத்தில் மகாகால பைரவ பூஜை நடைபெற உள்ளது.
தென்னக காசி என்று போற்றப்படும் இந்த ஆலயம், காசியைப் போலவே மயானத்தை அடுத்துள்ளது. அனுமன் நதியை அடுத்துள்ளது. அஷ்ட பைரவரும் காசியைக் காவல் புரிவது போல அவல்பூந்துறை ராட்டைச் சுற்றிபாளையம் ஸ்ரீகாலபைரவரும் தமிழகத்தைப் பாதுகாத்து வருகிறார் என்பது நம்பிக்கை.
சிறப்பினும் சிறப்பாக வேறெங்கும் காண முடியாத வகையில் மிகப்பெரிய பைரவர் சிலை 39 அடி உயரத்தில் இங்கு அமைந்துள்ளது.
மேலும் ஆலய முகப்பு, கருவறை, பிராகார மண்டபத்தின் மேற்பகுதியில் என இந்த ஆலயத்திலேயே 64 பைரவர்களையும் தரிசிக்க முடியும் என்பதும் சிறப்பு.
இங்கு வந்து வாழ்வில் பல முன்னேற்றங்களையும் அடைந்துள்ளார்கள் என இந்த ஊர் மக்களும் ஸ்ரீகாலபைரவரைக் கொண்டாடுகிறார்கள். இங்கு வந்து நீங்களே எந்தவித பேதமும் இன்றி பைரவருக்கு அபிஷேக ஆராதனைகளும் செய்யலாம் என்பதும் விசேஷம்.

ஆதியில் 64 கோடி யோகினியரும் நவகோடி சித்தர்களும் இங்கு வந்து மகாகால பைரவரை உபாசித்து தவம் இருந்தார்களாம். பிறகு இந்த ஆலயம் சிதைந்துவிட, காலபைரவரின் கட்டளையால் தற்போது தற்போது ஆதிசித்தர். ஸ்ரீவிஜய் சுவாமிகள் ஆலயத்தை பிரமாண்டமாக எழுப்பி பல்வேறு பூஜைகளையும் விழாக்களையும் நடத்தி வருகிறார்.
ராகு காலம், அஷ்டமி, பௌர்ணமி, அமாவாசை நாள்களில் இங்கு அமோகமான பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

14-10-2025 செவ்வாய்க்கிழமை தேய்பிறை அஷ்டமி நன்னாளில் நடைபெறும் ஸ்ரீகாலபைரவ பூஜையில் நீங்களும் கலந்துகொண்டு உங்கள் வாழ்வில் பெரும் வளர்ச்சியைப் பெற அன்போடு அழைக்கிறோம்.
நிச்சயம் இந்த பூஜையில் சங்கல்பம் செய்து கொண்டால் உங்கள் விருப்பங்கள் யாவும் நிறைவேறும். இங்கு அளிக்கப்படும் பச்சை வண்ண ஆகர்ஷண குங்குமம் உங்களை வெற்றியாளராக மாற்றும். இங்கு அளிக்கப்படும் ரட்சை உங்களுக்கு காவலாக நின்று கவலைகள், அச்சங்களை விலக்கும்.

குறிப்பு: உங்கள் தெளிவான முகவரியை குறிப்பிடவும். அது பிரசாதம் சீக்கிரம் வந்தடைய உதவும்.
முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 – 66802980/07
ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.
வாசகர்கள் கவனத்துக்கு:
இந்த பூஜையில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், பூஜைக்கான சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பூஜை சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு பைரவ ஆகர்ஷண குங்குமம், விசேஷ ரட்சை, அட்சதை அனுப்பி வைக்கப்படும் (தமிழகம் – புதுவை பகுதிகளுக்கு மட்டும்).
வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம். https://www.facebook.com/SakthiVikatan