shriram_life_0708chn_1

கடந்த ஜூலை மாதத்தில் ஸ்ரீராம் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் புதிய பிரீமியம் வசூல் (என்பிபி) 21 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஜூலை மாதத்தில் நிறுவனம் புதிய பாலிசிகளை விற்பனை செய்ததன் மூலம் ரூ.257 கோடி பிரீமியம் வசூலித்தது.இது, முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்தைவிட 21 சதவீதம் அதிகம். அப்போது நிறுவனத்தின் புதிய பிரீமியம் வசூல் ரூ.212 கோடியாக இருந்தது.

2024 ஜூலை மாதத்தில் ரூ.259 கோடியாக இருந்த நிறுவனத்தின் புதுப்பிப்பு பிரீமியம் வசூல், நடப்பாண்டின் அதே மாதத்தில் ரூ.323 கோடியாக அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest