
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய மகளிரணி 318 ரன்கள் குவித்துள்ளது.
இங்கிலாந்துக்கு எதிராக முதல்முறையாக டி20 தொடரை இந்திய மகளிரணி ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
முதல் போட்டியில் இந்தியா வெல்ல, இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து வென்று தொடர் 1-1 என சமநிலையில் இருக்கிறது.
தொடரில் கடைசி போட்டியான 3-ஆவது போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கத் தேர்வு செய்தது.
இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் சதமடித்து அசத்தினார். மந்தனா 49 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஜெமிமா அரைசதம் அடித்தார்.

இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு இந்திய மகளிரணி 318 ரன்கள் குவித்தது.
இங்கிலாந்து மகளிரணி சார்பில் ஐந்து பந்துவீச்சாளர்களும் தலா 1 விக்கெட் எடுத்து அசத்தினார்கள்.
இந்தத் தொடரை வெல்ல இங்கிலாந்து மகளிரணிக்கு 319 ரன்கள் தேவைப்படுகிறது. இந்திய அணி தொடரை வெல்லும் முனைப்பில் இருக்கிறது.