
இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, அட்டக்கத்தி தினேஷ், கலையரசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘வேட்டுவம்’. இதன் படப்பிடிப்பு நாகப்பட்டினம் கீழையூரில் நடைபெற்றக் கொண்டிருக்கிறது. இப்படப்பிடிப்பில் மோகன் ராஜ் (வயது 52) என்ற சீனியர் ஸ்டண்ட் கலைஞர் சண்டைக் காட்சியின் போது உயிரிழந்திருக்கிறார்.

விபத்தின் சண்டைக் காட்சியைப் படமாக்கும்போது மோகன் ராஜ் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இது தமிழ்த் திரையுலகில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
அவருடன் பணியாற்றியவர்கள் தங்களது வருத்தங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம், “திரு. மோகன் ராஜ் அவர்களின் ஆன்மா சாந்தியடைய பிராத்திக்கிறோம். அவரின் குடும்பத்திற்கு தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் இரங்கலை தெரிவிக்கும் இந்த நேரத்தில்,
இது போன்ற விபத்துகள் இனி தமிழ் திரைப்பட தயாரிப்புகளில் நடக்காமல் இருக்க, தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும், ஸ்டண்ட் மாஸ்டர்-களும், சண்டை கலைஞர்களும் மேலும் சிறப்பான முன்னேற்பாடுகளையும், பாதுகாப்பு நடவடிக்கைகளையும் செய்ய வேண்டும் என்று கேட்டு கொள்கிறோம்.

பார்வையாளர்களை கவர நம் திரைப்படங்களில் உலக தரத்திற்கு ஹாலிவுட் போல சண்டைக்காட்சிகள் இடம்பெற முயற்சிப்பது அவசியம். அதே சமயம், ஹாலிவுட் படப்பிடிப்புகளில் செய்யப்படும் பாதுகாப்பு முன்னேற்பாடுகளையும் நம் படப்பிடிப்புகளில் செய்த பின் தான், சண்டை காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற வேண்டும். இன்னொமொரு கலைஞனின் உயிர் பலியாகாமல் தடுக்க, நாம் அனைவரும் இனிமேல் இதை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்” என்று கடிதம் ஒன்றை வெளியிட்டிருக்கிறது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…