E0AE95E0AE9FE0AEB2E0AF8D-E0AE93E0AE9AE0AF88-FM-E0AEA8E0AEBFE0AEB1E0AF81E0AEB5E0AEA9E0AEB0E0AF8D-E0AE86E0AEAEE0AF8DE0AEB8E0AF8DE0AE9FE0AF8DE0AEB0E0AEBEE0AE99E0AF8D

பாம்பன் `கடல் ஓசை FM’

ராமேஸ்வரம் பாம்பன் பகுதியில் இயங்கும் `கடல் ஓசை FM’ பத்தாம் ஆண்டினை இன்று கொண்டாடி வரும் சமயத்தில் அவர்களை சந்தித்தோம். அதன் தலைமைச் செயலாளர் ஆம்ஸ்ட்ராங் நம்மிடம் பேசும்போது,

“நான் ஒரு சாதாரண மீனவனாக இருக்கும் சமயத்தில், என் நண்பர்களுடன் வெளியே சுற்றுலா செல்லும் பொழுது ஏதாவது எனது மீனவ சமுதாயத்திற்கு செய்ய வேண்டும். மற்றவர்களை போல் சாதாரண மனிதனா இருக்கக்கூடாது அவர்களுக்கு ஏதாவது ஒரு விதத்தில் முன்னேற்றம் கொண்டு வர வேண்டும் என்று எண்ணங்கள் எனக்கு இருந்தது.

திண்டுக்கல் அருகில் சிறுமலை என்ற ஒரு மலைப்பகுதி உள்ளது. அங்கு `பசுமை FM’ என்ற வானொலி மையம் இருந்தது. அதை பால் பாஸ்கர் என்பவர் தான் நடத்துகின்றார் என்று அறிந்தேன். அவர் விவசாயிகளின் முன்னேற்றத்திற்காக அமைதி அறக்கட்டளையின் மூலம் அவர் விவசாயிகளுக்கு சர்வீஸ் செய்து கொண்டிருந்தார்.

மீனவர்களுக்காக ஒரு ரேடியோ ஸ்டேஷன்

அதை பார்க்கும் பொழுது அவர் விவசாயிகளுக்கு செய்யும் பொழுது நாம் ஏன் மீனவர்களுக்கு செய்யக்கூடாது, என்ற எண்ணம் தோன்றியது. நாம் ஏன் ஒரு ரேடியோ ஸ்டேஷன் ஆரம்பிக்கக் கூடாது என்ற எண்ணம் திண்டுக்கல்லில் உள்ள சிறுமலையில் இருக்கும் பொழுது தான் எனக்குத் தோன்றியது.

நான் அப்பொழுது அவரைப் போய் பார்க்கும் பொழுது அவர் சென்ட்ரல் கவர்ன்மெண்டில் எட்டு மினிஸ்ட்ரியில் லைசென்ஸ் வாங்க வேண்டும் என்று அவர் என்னிடம் கூறினார். அவரும் எனக்கான தன்னால் இயன்ற உதவிகளை செய்தார்.

கடல் ஓசை FM 10-ம் ஆண்டு துவக்க விழாவில்
கடல் ஓசை FM 10-ம் ஆண்டு துவக்க விழாவில்

`மீனவர்களுக்கு முன்னேற்றம் வேண்டும்’

ஐந்து வருடம் கஷ்டப்பட்டு தான் இந்த லைசன்ஸ் வாங்கினேன். ஆனா டெல்லியில் நான் போகும் போது சமுதாய வானொலி என்பது வணிக எஃப் எம் போல் அல்ல, சற்று யோசித்து கொள்ளுங்கள். விளம்பரம் அதிகம் வராது. நீங்கள் இராமநாதபுரத்தில் தொடங்குகள் என்று யோசனை கூறினார்கள். ஆனால் எனக்கு என்னுடைய கம்யூனிட்டி முன்னேற வேண்டும் மீனவர்களுக்கு ஒரு முன்னேற்றம் வேண்டும் என்ற எண்ணம் மட்டும்தான் இருந்தது. ஆனா நான் வந்து ராம்நாட்ல பண்ண மாட்டேன் பாம்பனில் “for the people by the people” என்பது தான் என் நோக்கம்.

பாம்பனில் என்னுடைய சொந்த கட்டிடத்தில், சொந்த செலவில் தான் கிட்டத்தட்ட இரண்டு கோடி செலவில் ஆரம்பித்தேன். இதுவரை, அதில் அதிகமான போராட்டங்களும் பிரச்னைகளும் இருக்கத்தான் செய்கின்றது. நான் மீன்பிடித் தொழில் எனக்கு சொந்தமான படகுகள் இருந்தாலும், நான் மற்ற ஏற்றுமதி இறக்குமதி வேலைகள், பிறவேலைகளில் கிடைக்கும் வருமானத்தை கொண்டுதான் நடத்தி வருகின்றேன்.

கடல் ஓசை FM 10-ம் ஆண்டு துவக்க விழாவில்
கடல் ஓசை FM 10-ம் ஆண்டு துவக்க விழாவில்

ஒரு மாதத்திற்கு 3,00,000 முதல் 3,50,000 வரை fm-க்காக செலவு செய்கிறேன். அதன்மூலம் எனக்கு 50 ஆயிரம் ரூபாய் தான் வருமானம் வருகிறது. இந்த 50,000 லோக்கல்ல வந்து விளம்பரம் பண்ணுவது தான். 24 மணி நேரம் நடத்துகிறோம்.

அதாவது எப்படின்னா வடக்கு உள்ள மீனவர்கள் ஒரு சமயத்தில் கடலுக்கு போவார்கள் தெற்கு உள்ள மீனவர்கள் ஒரு சமயத்தில் கடலுக்கு போவார்கள் அவர்கள் இரண்டு பேருக்கும் தேவையான செய்திகளை அளிப்பதற்காக நாங்கள் 24 மணி நேரம் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த 22 பேர்ல ஒரே ஒரு பெண்ணை தவிர மற்ற அனைவரும் இந்த மீனவ சமுதாயத்தை சேர்ந்த மக்கள் தான் இங்கு வேலை செய்கிறார்கள்.

எல்லா சமுதாயத்தை சேர்ந்த மக்களும் இங்க வந்து வேலை செய்கிறார்கள், எல்லா சமுதாயம் எல்லா மதத்தை சார்ந்த மக்களும் வேலை செய்கிறார்கள் இங்கு வந்து சிறு பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை, இரண்டு கண்களும் 100% பாதிக்கப்பட்ட தங்கம் என்பவர் RJ வாக வேலை செய்கிறார்.

அது பார்க்கும் போது மன நிறைவாக உள்ளது. பிற தொழிலில் உள்ள வருமானத்தை எடுத்துதான் இதில் போட்டு கொண்டிருக்கிறேன். இதற்கான காரணம் எப்படியாவது இந்த மீனவ சமுதாயத்தில் ஏதாவது ஒரு வகையில் ஒரு முன்னேற்றம் வேண்டும் என்கிற என்னுடைய எண்ணத்திற்காக தான் அதன் பலனை நான் இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக அறுவடை செய்து கொண்டிருக்கிறேன்.

கடல் ஓசை FM 10-ம் ஆண்டு துவக்க விழாவில்
கடல் ஓசை FM 10-ம் ஆண்டு துவக்க விழாவில்

`நெய்தல் பெண்ணே’ நிகழ்ச்சி

எடுத்துக்காட்டாக சொல்ல வேண்டும் என்றால் `நெய்தல் பெண்ணே’ நிகழ்ச்சி மூலம் பெண்களுக்கு சிப்பி கோர்ப்பது போன்ற பல விதமான காரியங்களுக்கு நாங்கள் ஒத்துழைப்பு செய்து வருகிறோம்.

கடல் காப்பான்

நமது மீனவ சமுதாயத்தில் ஆமைகளை பிடித்து அதை வெட்டி சாப்பிட்டு கொண்டிருந்தார்கள். ஆனால், அதெல்லாம் தவறு என்று கூறி இந்த ஆமைகளை பிடித்து திரும்ப கடலுக்குள் விட்டால் அவர்களுக்கு “கடல் காப்பான்” என்ற ஒரு விருதை வழங்கி வருகிறோம். இதன் மூலம் ஆயிரக்கணக்கான ஆமைகள் காப்பாற்றிக் கொண்டு வருகிறதை நாங்கள் பார்க்கிறோம்.

அதை நாங்கள் எப்படி செய்கிறோம் என்றால் கடலில் வலைவிட்டு இருக்கும் பொழுது வலையில் ஆமைகள் வந்தால் அந்த வலையில் இருந்து ஆமைகளை எடுத்து கடலில் விடுவதை live location video எடுத்து எங்களுக்கு அனுப்பும் பொழுது விருது மற்றும் 1000 ரூபாய் ரொக்க பரிசும் கொடுத்து வருகிறோம். இதனால் வனத்துறை மத்திய அரசு விருதை பெற்று கொடுத்தது. இப்படியாக பிளாஸ்டிக் கடலில் போடக்கூடாது போன்ற ஒவ்வொரு காரியங்களையும் எடுத்து கூறி கடலை காத்து வருகிறோம்.

இந்த பத்தாவது வருட விழாவை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

இந்த ஒன்பது வருடத்தில் அநேக சிரமங்களை நாங்கள் பார்த்திருக்கிறோம். ஆனால் இப்பொழுது நிறைய பேர் போன் பண்ணி நன்றி சொல்கிறார்கள்.

லண்டனில் இருந்து ஒரு போன் அண்ணே நல்லா இருக்கீங்களா அப்படின்னு சொல்லிட்டு யாருன்னு கேட்க கடலோசை எஃப்எம் மூலமாக லண்டனில் படிச்சிட்டு இருக்கேனு ஒரு பையன் பேசினான். அது ரொம்ப சந்தோஷமாக இருந்து. இந்த முன்னேற்றத்திற்கு காரணம் எனது ஃபேமிலியும் எனது பிள்ளைகளும் தான் மிகுந்த ஷப்போட்டா இருந்தாங்க. யாரு எடுக்காத விஷயத்தை நீங்க எடுக்குறீங்க மத்தவங்களுக்கு ஒரு முன் மாதிரியா இருக்குறீங்க தொடர்ந்து இந்த காரியத்தை செய்யுங்கள் என்று உச்சாக படுத்தினார்கள்

மேலும் காயத்ரி என்பவர்கள் எனது நண்பனின் மனைவி அவர்கள் வேறு ஒரு தனியார் வானொலியில் வேலை செய்தார்கள். அந்த வேலையை விட்டுவிட்டு இங்கு வந்து எங்களுடன் பணியாற்றி ஒரு மீனவர் பெண் போல மீனவர்களோடு இருந்து வேலை செய்கிறார்கள். குழந்தைகளுக்கான செக்ஸ்சுவல் ஆபீஸ் ஆகட்டும் எந்த பிரச்னையானாலும் அதில் எல்லா விதமான உதவிகளையும் ஆலோசனைகளையும் கொடுக்கிறார்கள். மீனவ சமுதாயம் எங்கள் காயத்ரி அவர்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள் இது திருமணம் என்றால் உடை எடுத்து கொடுப்பது, எங்கள் வீட்டுக்கு சாப்பிட வா என்று அழைப்பது என்று மிகுந்த அன்புடன் இருக்கிறார்கள்.

கடல் ஓசை FM 10-ம் ஆண்டு துவக்க விழாவில்

மேலும் குடும்பத்தில் ஒரு பிரச்னை என்றால் கூட எங்கள் fm-க்கு தெரியப்படுத்துகிறார்கள். அங்கு காயத்ரி மேடம் சென்று மருமகனுக்கும் மகளுக்கும் இடையில் உள்ள பிரச்னைகளை சரி செய்து மனநல ஆலோசனை கொடுத்து வழி நடத்துகிறார்கள். நான் வெறும் பண உதவிகள் மட்டுமே செய்கிறேன். ஆனால் இதை தொடர்ந்து நடத்துவது காயத்ரி மேடம் அவர்களே. இதை இவ்வளவு தூரம் கொண்டு செல்வது காயத்ரி மேடம் மட்டும் தான். பாராட்ட வேண்டும் என்றால் அவர்களைத் தான் முதலில் பாராட்ட வேண்டும். நான் வெறும் பண உதவி மட்டும் தான் செய்து கொண்டிருக்கிறேன். ஆனால் இதை காயத்ரி தான் தொடர்ந்து கொண்டு செல்கிறார்.

மீனவர் சமுதாயத்திலும் இது நல்ல ஒரு முன்னேற்றமாய் இருக்கிறது. நிறைய நல்ல விஷயங்களை கொடுக்கிறோம். குட் டச் பேட் டச் போன்ற ஒழுக்கமான விஷயங்களையும் குடிச்சிட்டு வண்டி ஓட்டக்கூடாது, ஆம்பள பசங்களை எப்படி நம்ம வளர்க்கணும், பொம்பள பசங்கள எப்படி வளர்க்கணும், சொல்லிக் கொடுக்கிறோம். இதன் மூலம் பெரிய ஆத்ம திருப்தி உண்டாகிறது.

மேலும், ஆனந்த விகடன் `நம்பிக்கை நட்சத்திரம்’ என்ற விருது எனக்கு கொடுத்தது எங்க கடலோசை வானொலியை வெளியே காட்டியது. இங்க உள்ள பாண்டி, மோகன் அண்ண அவர்களுக்கும் விகடனுக்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.” என்றார்.

பத்தாவது ஆண்டு விழாவை ஒட்டி அந்த பகுதி மீனவரிடம் கேட்கும் பொழுது அவர் கூறியதாவது, “என் பெயர் ஜெயபிரகாசம் நான் பாரம்பரிய மீனவர் குடும்பத்தை சேர்ந்தவன். கடலோசை எஃப்எம் என்பது மீனவர்களுக்கு அனைத்து தகவல்களையும் அள்ளி அள்ளி கொடுக்கின்றது.எங்கள் முன்னோர்களில் எத்தனையோ பேர் நூறு பேருக்கு மேலாக வந்து பொது சேவைகளில் வாழ்ந்து சென்றிருக்கிறார்கள். ஆனால் இந்த நூறு பேரை கடந்து அனைத்து சேவைகளையும் கடலோசை எஃப் எம் செய்கிறது. மேலும் எந்த எந்த மீன்களை பிடிக்க கூடாது, தீமை என்ன என்றும், அவுளிய மீனை பிடிக்கக்கூடாது, ஆமையை பிடிக்க கூடாது, அவை பிடிப்பதால் பாதிப்பு என்ன, மீனவர்களுக்கு காற்று என்ன ,கடல் அலைகள் என்ன, கடலின் வேகம் என்ன, என்று எங்கள் மீனவ பெண்களுக்கு தெரியாத காற்றுகளை பற்றிய செய்திகளை இந்த எஃப்எம் வழியாக தெரிந்து கொள்கிறார்கள். கடல் சார்ந்த விஷயங்களையும் காற்று சார்ந்த விஷயங்களில் எஃப்எம் மூலம் எங்கள் வீட்டு பெண்கள் கற்றுக் கொள்கிறார்கள்.

மீனவர்களுக்கு கொடுத்த தகவல்களை ஒவ்வொருவரிடம் சென்று கேட்கிறார்கள். நான் ஆம்ஸ்ட்ராங் அவர்களை நினைக்கும் போது காலத்தால் அழியாத ஒரு சொத்தை அவர் உருவாக்கி வைத்திருக்கிறார் என்றே சொல்லுவேன். மீனவர்களுக்கு 100 பேர் செய்கிற சேவைகளை இந்த கடலோசை எஃப்எம் செய்கிறது.” என்றார்.

“என் பெயர் சசிகலா. நான் காலை 8:00 மணிக்கு எல்லாம் இதை கேட்க ஆரம்பித்துவிடுவேன் 8:30-க்கு எல்லாம் குழந்தைகள் ஸ்கூலுக்கு போய்விடுவார்கள். கணவர் கடற்கரை போயிருவாரு. அப்ப வீட்ல நம்ம தனிமையாய் இருக்கும் சமயம் இந்த நிகழ்ச்சிகளை கேட்கும் பொழுது நமக்கு அந்த தனிமையா இருக்குறாங்குற எண்ணும் இல்லாம போகும். விழிப்பு பாடல்கள் தொடங்கி இன்றைக்கு நம்ம ஊர்ல என்ன நடக்குது, பக்கத்து ஊர்ல, நம்ம ராமநாதபுரம் மாவட்டத்தில் என்ன நடக்கும் சொல்லி எல்லா விஷயங்களை சொல்லிருவாங்க, நாங்க எங்க வீட்டுக்குள்ள இருந்தாலும் வெளியே என்னென்ன நடக்கின்றது என்ற விஷயத்தையும் நாங்க வெளியே போகாமலே இந்த fm மூலமா நாங்க அறிந்து கொள்கிறோம்.

கடலோடு விளையாடு, நெய்தல் பெண்ணே

கடலோடு விளையாடு, நெய்தல் பெண்ணேங்கிற நிகழ்ச்சியில பெண்களுக்கு உண்டாகும் ஒவ்வொரு சந்தேகத்தையும் அவர்கள் தெளிவாக சொல்வார்கள்.

அது மட்டும் இல்லாம சமையல் டிப்ஸ் ஆகட்டும். பெண்களோடு சாதனைகள் ஆகட்டும், இன்னும் நம்ம ஊர்ல உள்ள சாதிச்சவர்களோட லிஸ்ட் ஆகட்டும், நம்ம ஊர்ல உள்ள யார் யார் என்ன சாதிக்கிறார்கள். எந்தெந்த விதத்தில் சாதிக்கிறார்கள், என்று அறிய முடிகிறது. எஃப் எம்மூலம் அதிகமான விஷயங்களை நாங்க தெரிஞ்சுக்கிறோம். எங்க ஊர்ல ஃபேமஸ் பரோட்டா எஃப்எம் -ல சொன்னதுல இருந்து மைதாவின் தீமைகளை அறிந்து கொண்டு அதிலிருந்து நாங்க இந்த மைதா உணவுப் பொருட்களை சாப்பிடுவதை சுத்தமா நாங்க குறைச்சிட்டோம்.

கடையில உணவு பொருள்கள் வாங்கி சாப்பிடுகிறதை சுத்தமாக குறைச்சிட்டோம். எங்களோட வளர்ச்சிக்கு எஃப்எம் மிகவும் உதவியாக இருக்கிறது. எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது எங்களுக்கு வந்து தனிமையை போக்குது இந்த சமுதாய வானொலி வந்தது. எங்களுக்கு உண்மையிலேயே எங்களை பெருமைப்பட வைக்கின்றது நாங்க பெருமையா நினைக்கிறோம்.” என்றார் சசிகலா.

பள்ளி மாணவி ஜெஸிக்கா கூறும்போது, “நான் 11-த் ஸ்டாண்டர்ட் படிக்கிறேன். எஃ ப்எம்ல `குட்டி சுட்டி எக்ஸ்பிரஸ்’, `கடலோடு விளையாடு’ கேட்போம். எங்க அம்மா இதை கேட்கச் சொன்னார்கள். இதன் மூலம் நிறைய விஷயங்களை நாங்க அறிந்து கொள்கிறோம். அதுல வந்து நிறைய விடுகதைகள் கேட்பார்கள். அந்த விடுதலைக்கு பதில் சொல்லணும்னு ஆர்வமா இருக்கும். அந்த விடுகதை எல்லாம் நாங்க கேட்டுட்டு போய் காலைல ஸ்கூலுக்கும் போய் பிரெண்ட்ஸ் கிட்ட கேட்பேன். அவங்க எல்லாம் அந்த விடுகதைக்கு பதில் சொல்லாம ஒரு சில நேரம் முழிப்பாக அது நமக்கு சந்தோசமா இருக்கும்.

அடுத்த நாள் வந்து திரும்ப விடுகதை கேட்டுட்டு போய் கேள்வி கேட்பேன் இப்படியே இருந்துச்சு. இதை பார்த்து என்னோடு பிரெண்ட்ஸ் நீ அதுல கேள்வி கேக்குறியா அப்படின்னு சொல்லிட்டு எங்களோட டென்த் புக்ல இருந்து கேள்வி கேட்க ஆரம்பிச்சாங்க அந்த கேள்வியை கண்டுபிடிக்கிறதா நாங்க புக்கை நோண்ட ஆரம்பிச்சோம். அந்த புக்குல இருந்து மேக்ஸ்ல இருந்து ஒவ்வொன்னா நாங்க கேட்டு கேட்டு படிப்பை வைத்து விளையாடினார்கள். சாதாரணமா நாங்க ஒரு விடுகதை என்கிற நிகழ்ச்சியில கலந்துக்கிட்டு இப்ப எங்க பிரண்ட்ஸ் எல்லாருமே மாத்தி மாத்தி கேள்வி கேட்க நாங்க எல்லாரும் 10 வகுப்பு தேர்வில் 400-க்கு மேல் எடுத்திருந்தோம். இப்படியா மறைமுகமா எஃப்எம் எங்களுக்கு உதவி யாக இருந்தது. ” என்றார்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest