
வாஷிங்டன்: வரி விகிதம் தொடர்பாக 12 நாடுகளுக்கான கடிதத்தில் தான் கையெழுத்து இட்டுவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரியில் அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப், பல்வேறு நாடுகளுக்கான இறக்குமதி வரியை கடுமையாக உயர்த்தினார். இதற்கு அனைத்து நாடுகளும் கடும் அதிருப்தி தெரிவித்தன. இதையடுத்து, பல்வேறு விதமான வரி விகிதங்களை மாற்றி 90 நாட்களுக்கு தற்காலிக அடிப்படை வரியாக 10%-ஐ நிர்ணயித்து ட்ரம்ப் உத்தரவிட்டார்.