
தாம்பத்தியம் குறித்து அதிகமான பெற்றோர் தங்களது பிள்ளைகளுடன் பேசுவதில்லை. ஆனால் பாலிவுட் மற்றும் டிவி நடிகை நடிகை கெளதமி கபூர் தனது மகளுடன் இது குறித்து 16வது வயதிலேயே பேசியதாக ரியாலிட்டி ஷோ ஒன்றில் கலந்து கொண்டு பேசிகையில் குறிப்பிட்டுள்ளார்.
அவர் அளித்த பேட்டியில்,” எனது மகளுக்கு 16வது பிறந்தநாள் வந்தபோது அவளுக்கு செக்ஸ் பொம்மை அல்லது வைப்ரேட்டரை கிப்டாக கொடுக்கவேண்டும் என்று நினைத்தேன். இது குறித்து எனது மகளிடம் கலந்து ஆலோசித்தேன். எத்தனை தாய்மார்கள் தங்கள் மகள்களிடம் ‘நான் ஏன் இதுபோன்ற பரிசுகளை உங்களுக்குக் கொடுக்கக்கூடாது?’ என்று கேட்பார்கள் என்று யோசித்துப் பார்க்கச் சொன்னேன். ஏன் பரிசோரித்து பார்க்கக்கூடாது?” என்று கேட்டேன்.

எனக்கு ஏற்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் இதனை கேட்பதாக எனது மகளிடம் தெரிவித்தேன். என் அம்மா எனக்குச் செய்யாததை, நான் என் மகளுக்குச் செய்ய விரும்புகிறேன். அவள் எல்லாவற்றையும் அனுபவிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நிறைய பெண்கள் வாழ்க்கையின் இன்பங்களை அனுபவிக்காமல் வாழ்கிறார்கள். ஏன் அந்த சூழ்நிலையில் இருக்க வேண்டும்?. இன்று, என் மகளுக்கு 19 வயது, எனக்கு அந்த எண்ணம் இருந்ததைப் எனது மகள் பாராட்டுகிறாள், அதற்காக என்னை மதிக்கிறாள்”என்று குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்த செய்தி சமூக ஊடகங்களில் வெளியானவுடன் நெட்டிசன்கள் பலரும் பல்வேறு விதமான கருத்துக்களை பகிர்ந்துள்ளனர். சிலர் கெளதமி கபூரின் செயலை வரவேற்றுள்ளனர். அதே சமயம் சிலர் இது போன்ற கிப்ட் கொடுப்பது குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் பாலியல் நலன் பற்றி எப்படி, எப்போது பேச வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது. 2025 இல் கூட, பாலியல் பற்றி வெளிப்படையாகப் பேசுவது நமக்கு இவ்வளவு சங்கடமாக இருக்கிறது. ஆனால் யுனஸ்கோ அமைப்பு பெற்றோர் தங்கள்து பிள்ளைகளிடம் எப்போது பாலியல் குறித்து பேசவேண்டும் என்று வழிகாட்டி இருக்கிறது.
10 முதல் 13 வயதிற்குள் இது குறித்து பேச தொடங்கலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வயதில் பருவமடைதல் மற்றும் அதனால் ஏற்படக்கூடிய மாற்றங்கள் குறித்து பேசலாம். 14-16 வயதில் கருத்தடை சாதனங்கள், டேட்டிங்கில் எப்படி நடந்து கொள்ளவேண்டும், டிஜிட்டலால் எந்த அளவுக்கு அபாயம் இருக்கிறது என்பது குறித்து தெரிவிக்கலாம்.

16 மற்றும் அதற்கு மேல் பாதுகாப்பான முறையில் எப்படி உறவு வைத்துக்கொள்வது என்பது குறித்து பேசலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அனைத்து பாலியல் தொடர்பான தகவல்களை 16 வயதில் பகிர்ந்து கொள்ளலாம் என்றும், அந்த வயதில் அனைத்தையும் அவர்களால் புரிந்து கொள்ள முடியும் என்று டாக்டர் அரோஹி தெரிவித்துள்ளார். கெளதமி கபூர் டிவி நிகழ்ச்சி படப்பிடிப்பில் ராம் கபூர் என்பவரை சந்தித்து காதலிக்க ஆரம்பித்தார். இருவரும் இரண்டு ஆண்டு காதலித்துவிட்டு 2003ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…