
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா 373 ரன்கள் முன்னிலை பெற்றது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஓவலில் நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 224 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸில் 247 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இங்கிலாந்து அணி இந்தியாவைக் காட்டிலும் 23 ரன்கள் முன்னிலை பெற்றது.
இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி, இன்று (ஆகஸ்ட் 2) மூன்றாம் நாள் ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்ஸில் உணவு இடைவேளைக்குப்பின், இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 396 ரன்கள் எடுத்தது.
இன்னும் 2 நாள் ஆட்டம் மீதமுள்ள நிலையில், இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்து விளையாடி வருகிறது. விக்கெட் வீழ்த்தினால் வெற்றி இந்தியா வசம்; இல்லையேல் இங்கிலாந்து தொடரைக் கைப்பற்றிவிடும். இப்படி பரபரப்பான கட்டத்தில் கடைசி டெஸ்ட் நகருகிறது!