
டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர், ஸ்டீவ் ஸ்மித் 210 இன்னிங்ஸுக்குப் பிறகான ஒப்பிட்டீல் இருவருமே கிட்டதட்ட சரிசமமாக ரன்களை குவித்துள்ளார்கள்.
இந்தியாவின் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் (52 வயது) 2013-இல் டெஸ்ட்டில் ஓய்வு பெற்றார்.
ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் (36 வயது) 2010-இல் டெஸ்ட்டில் அறிமுகமாகி விளையாடி வருகிறார்.
சமீபத்தில் இலங்கைக்குக்கு எதிரான தொடரில் ஸ்டீவ் ஸ்மித் 10,000 ரன்களை கடந்தார்.
சச்சின் டெண்டுல்கர் 210 இன்னிங்ஸில் 10,435 ரன்கள் குவிக்க ஸ்டீவ் ஸ்மித்தும் 210 இன்னிங்ஸில் 10,424 ரன்கள் குவித்துள்ளார். சராசரி, சதம், அரைசதங்களில் ஸ்டீவ் ஸ்மித் சச்சினை முந்தியுள்ளார்.
இரண்டு ஜாம்பவான் கிரிக்கெட்டர்களின் எண்கள் கிட்டதட்ட ஒரேமாதிரியாக இருப்பதால் கிரிக்கெட் ரசிகர்கள் நெகிழ்ச்சியடைந்து வருகிறார்கள்.
சச்சின் டெண்டுல்கர் (210 இன்னிங்ஸில்)
ரன்கள்: 10,435
சராசரி: 55.51
அதிகபட்ச ஸ்கோர்: 248*
அரைசதம்: 41
சதம்: 35
இரட்டைச் சதம்: 4
ஸ்டீவ் ஸ்மித் (210 இன்னிங்ஸில்)
ரன்கள்: 10,424
சராசரி: 56.35
அதிகபட்ச ஸ்கோர்: 239
அரைசதம்: 43
சதம்: 36
இரட்டைச் சதம்: 4