
மும்பைக்கு அருகே உள்ள அலிபாக் இன்று பல பிரபலங்களின் விருப்பமான விடுமுறை இடமாக மாற்றியிருக்கிறது. ஷாருக் கான், தீபிகா படுகோன், ரன்வீர் சிங் உள்ளிட்டோர் அங்கு வீடு வைத்திருக்கின்றனர்.
அந்த வரிசையில் தற்போது கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலி மற்றும் நடிகை அனுஷ்கா ஷர்மா தம்பதியர் அலிபாகில் ₹32 கோடி மதிப்பில் பிரமாண்ட வீட்டை கட்டியுள்ளனர்.
இந்த வீட்டின் சிறப்பு அம்சங்கள்
இந்த வீடு 10,000 சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது. SAOTA என்ற சர்வதேச கட்டடக்கலை நிறுவனம் இந்த பிரமாண்ட வீட்டை வடிவமைத்தது. இயற்கை கற்கள், துருக்கி கற்பாறைகள் போன்றவை பயன்படுத்தி இந்த வீட்டை அழகாகவும் விலையுயர்ந்ததாகவும் உருவாக்கியுள்ளனர்.
வீட்டில் 4 படுக்கையறைகள், 4 குளியலறைகள் உள்ளன. மர வேலைப்பாடுகள் இல்லத்திற்கு இயற்கை வெப்பத்தையும் அழகையும் தருகின்றன.

இன்னும் என்ன வசதிகள் உள்ளன?
வீட்டில் உயரமான கூரைகள், இயற்கை மர வேலை, திறந்த வடிவமைப்பு, இயற்கை ஒளி புகுவதற்கான அமைப்பு என வீடே தனித்துவமான முறையில் கட்டப்பட்டுள்ளது.
வெப்பநிலைக் கட்டுப்பாட்டு நீச்சல் குளம், நீரூற்று குளியல் தொட்டி, சமையலறை, பெரிய பூங்கா, வீட்டினுள் வாகன நிறுத்தும் இடம், பணியாளர் quarters ஆகியவை உள்ளன.
வீட்டு வசதிகள் மொபைல் செயலியில் இருந்து கட்டுப்படுத்த முடியும். ஒளி முறை, வாயுகசிவு எச்சரிக்கை, காற்று-நீர் சுத்திகரிப்பு போன்றவை தானாக இயங்கும் நவீன தொழில்நுட்ப வசதிகளும் உள்ளன.
வீட்டின் உட்பகுதியில் பல தாவரங்கள் வைத்து பசுமை தோற்றம் கொடுக்கப்பட்டுள்ளது. விராட் கோலிக்கு வீட்டு தோட்டத்தில் உள்ள டைனிங் இடம் மிகவும் பிடித்தமானது என்று அவர் ஏற்கனவே கூறியுள்ளார்.

வீட்டின் மதிப்பு என்ன?
2022 ஆம் ஆண்டு 8 ஏக்கர் நிலத்தை ₹19 கோடிக்கு வாங்கியுள்ளனர். கட்டுமானத்திற்காக ₹10.5 கோடி முதல் ₹13 கோடி வரை செலவு செய்துள்ளனர். தற்போது வீட்டு மதிப்பு ₹32 கோடி என்று கூறப்படுகிறது. இந்த வீடு அவர்களின் ஒரு ஓய்வு வீடாக உள்ளது.
தற்போது விராட் கோலி – அனுஷ்கா தம்பதியினர் லண்டனில் தனியுரிமை வாழ்க்கைக்காக குடியேறியுள்ளனர்.