f35

திருவனந்தபுரத்தில் அவசர தரையிறக்கம் செய்யப்பட்ட பிரிட்டன் போர் விமானம், சுமார் ஒருமாத காலத்துக்குப் பின்னர் தாய்நாடு புறப்பட்டுச் சென்றது.

பிரிட்டன் எஃப் – 35 போர் விமானத்தில் எரிபொருள் குறைவாக இருந்ததாகக் கூறி, திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் ஜூன் 14 ஆம் தேதியில் அவசரமாக தரையிறங்கியது.

பிரிட்டன் கடற்படைக்குச் சொந்தமான இந்த விமானம், திருவனந்தபுரத்தில் எரிபொருள் நிரப்பிய பிறகு மீண்டும் பறக்க முயன்றபோது, பழுதானதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, பழுதுநீக்கத்துக்காக திருவனந்தபுரம் விமான நிலையத்திலேயே இருந்ததால், மீம்ஸ் விமர்சனத்துக்கும் இந்த விமானம் ஆளானது. கேரள சுற்றுலாத் துறையும் தனது பங்குக்கு பிரிட்டன் விமானம் தொடர்பான மீம்ஸ் ஒன்றை வெளியிட்டது.

இந்த விமானத்தை சரிசெய்வதற்காக பிரிட்டனில் இருந்து 25 பேர் கொண்ட விமானப் போக்குவரத்து மற்றும் பாதுகாப்புப் படை அதிகாரிகள் திருவனந்தபுரம் வந்தனர்.

பழுது சரிசெய்யப்பட்ட பின்னர், திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து எஃப் – 35 போர் விமானம் இன்று காலை பிரிட்டனுக்குப் புறப்பட்டுச் சென்றது.

சிறப்புகள்…

அமெரிக்கா, பிரிட்டன், இத்தாலி ஆகிய நாடுகளிடம் மட்டுமே இருப்பதாகக் கூறப்படும் இந்த ரக விமானம், போர்க்களத்தில் சிறப்பு வாய்ந்ததாகக் கொள்ளப்படுகிறது.

போர்க்களத்தின் முழுக் காட்சியையும் விமானிகளுக்கு காட்டும் தொழில்நுட்ப சென்சார்கள் கொண்டிருக்கும் இந்த விமானம், 51 அடி நீளமும், 7,000 கிலோ எடையை சுமந்து செல்லும் திறனுடையது.

இதன் மதிப்பு 100 மில்லியன் டாலர் (ரூ. 859 கோடி) என்கின்றனர். திருவனந்தபுரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தபோது, இந்த விமானத்தின் அருகே யாரையும் செல்லவிடாமல், அதனருகே விமானி ஒருவரும் துப்பாக்கி ஏந்திய பாதுகாவலரும் பாதுகாப்புப் பணியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

A British fighter jet that made an emergency landing in Thiruvananthapuram departed for the motherland after about a month.

இதையும் படிக்க : ஜகதீப் தன்கர் ராஜிநாமா ஏன்? எதிர்க்கட்சித் தலைவர்களின் சந்தேகமும் கருத்தும்!

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest