GvgWpdnXQAA26kf

இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் ரிஷப் பந்த் விக்கெட் கீப்பிங் செய்வார் என இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.

இந்தியா – இங்கிலாந்து இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி நாளை (ஜூலை 23) மான்செஸ்டரில் தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் இதுவரை மூன்று போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் உள்ளது.

லார்ட்ஸில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியின்போது, இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த்துக்கு கை விரலில் காயம் ஏற்பட்டது. அதனால், அவர் விக்கெட் கீப்பிங் செய்யவில்லை. அவருக்குப் பதிலாக துருவ் ஜுரெல் விக்கெட் கீப்பிங் செய்தார்.

இந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் ரிஷப் பந்த் விக்கெட் கீப்பிங் செய்வார் என இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இங்கிலாந்துக்கு எதிராக மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியில் ரிஷப் பந்த் விக்கெட் கீப்பிங் செய்வார். அவருக்கு ஏற்பட்ட லேசான காயத்திலிருந்து குணமடைந்து அவர் தற்போது நன்றாக உள்ளார் என்றார்.

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் ரிஷப் பந்த்துக்குப் பதிலாக விக்கெட் கீப்பிங் செய்த துருவ் ஜுரெல், இங்கிலாந்து அணி லெக் பைசில் 25 ரன்கள் எடுக்கக் காரணமாக இருந்தார். அவரது விக்கெட் கீப்பிங் அந்த அளவுக்கு சிறப்பாக இல்லை. இறுதியில், லார்ட்ஸ் போட்டியில் இங்கிலாந்து அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: முழுமையாக விளையாடுங்கள் அல்லது ஓய்வெடுங்கள்; பும்ராவுக்கு முன்னாள் ஆல்ரவுண்டர் அறிவுரை!

Indian captain Shubman Gill has announced that Rishabh Pant will keep wicket in the fourth Test against England.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest