GvwaKHLXQAAKcmG

இந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (ஜூலை 21) அறிவித்துள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இதுவரை 3 போட்டிகள் நிறைவடைந்துள்ளன. இரு அணிகளுக்கும் இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நாளை மறுநாள் (ஜூலை 23) தொடங்குகிறது.

பிளேயிங் லெவன் அறிவிப்பு

இந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் தொடங்கவுள்ள நிலையில், இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (ஜூலை 21) அறிவித்துள்ளது.

இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவனில் ஒரே ஒரு மாற்றம் மட்டும் செய்யப்பட்டுள்ளது. கை விரல் எலும்பு முறிவு காரணமாக சோயப் பஷீர் பிளேயிங் லெவனில் இடம்பெறவில்லை. அவருக்குப் பதிலாக பிளேயிங் லெவனில் லியம் டாஸன் சேர்க்கப்பட்டுள்ளார்.

4-வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன்

ஸாக் கிராலி, பென் டக்கெட், ஆலி போப் (துணைக் கேப்டன்), ஜோ ரூட், ஹாரி ப்ரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேமி ஸ்மித் (விக்கெட் கீப்பர்), லியம் டாஸன், கிறிஸ் வோக்ஸ், பிரைடான் கார்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர்.

5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் – டெண்டுல்கர் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: அந்த கடைசி 5 ஓவர்கள் இருக்கே… ஆஸி. பந்துவீச்சாளர்களுக்கு மிட்செல் மார்ஷ் புகழாரம்!

The England Cricket Board announced the playing eleven for the fourth Test against India today.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest